குமரன்

ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள்!

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து விட்டார்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் புற்கள் நிறைந்த காணப்படும். டியூக்ஸ் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் இங்கிலாந்து செல்லும் அணிகள் மிகப்பெரிய அளவில் திணறும். இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்துவது மிகமிக கடினம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆடுகளங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான வகையிலேயே உள்ளன. இதனால் ...

Read More »

சம்பந்தன் மட்டுமா ஏமாற்றப்படுகின்றார்?

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2015), ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ஏமாற்றப்பட்டு விட்டார் என்றவாறாகத் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் எனப் பலரும், அகத்திலும் புறத்திலும் விமர்சித்து வருகின்றனர். இந்த விடயம், தமிழர்களைப் பொறுத்த வரையில், உண்மையாக, வேதனையாகவே பகிரப்பட்டு வருகின்றது. இதன் அடுத்த கட்டமாகச் சம்பந்தன், தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாகப் பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர். இது வேடிக்கையாகவும் விசமத்தனத்துடனும் பகிரப்படும் விடயமாகும்.  இதில் உண்மையே இல்லை; ...

Read More »

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு !

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணியில் உள்ள தனியார் தென்னந் தோட்டத்திலிருந்து இன்று வியாழக்கிழமை  கைக்குண்டு ஒன்றை  மீட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.   நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் உள்ள வீதியில் காணப்பட்ட இலுக்குப் புல்லுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தீயானது பரவி வீதியின் அருகிலுள்ள தனியார் காணியினுள் பரவியதனை தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மர்மப்பொருள் ஒன்று தென்படுவதனை கண்டு வாழைச்சேனை காவல் துறை மற்றும் பிரதேசத்தின் கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தன் ஆகியோர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.   ...

Read More »

சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி! – 64 பேருக்கு விளக்கமறியல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் ...

Read More »

சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள நாசா விஞ்ஞானிகள் முயற்சி!

சந்திரயான் 2 லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கி 14 நாட்கள் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய லேண்டர் கருவியை மட்டும் திட்டமிட்டபடி தரை இறக்க முடியவில்லை. வேகம் அதிகரித்ததால் சற்று திசை மாறிவிட்ட லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் தென்துருவ பகுதியில் விழுந்து கிடக்கிறது. ...

Read More »

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு!

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில்  இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை ...

Read More »

ரஞ்சித்துடன் இணையும் பிரபல நடிகர்!

காலா படத்திற்குப் பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’  திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ...

Read More »

உயிரை உலை வைத்து மேற்கொள்ளும் சட்டவிரோத பயணங்கள் எதற்கு ?

பூகோ­ளப்­பந்தில் ஏற்­பட்­டுள்ள போட்­டித்­தன்­மையும் வேகமும் மிக்க வாழ்­வியல் போராட்­டத்தில் எவ்­ வ­ழி­யி­லா­வது சென்று வாழ்க்கை வட்­டத்தில் திழைக்க வேண்டும் என்­பதில் ஒவ்­வொரு மக்கள் தரப்­பி­னரும் வெவ்­வே­று­பட்ட சூட்­சு­மங்­களை கையாள துணி­கின்­றனர். புக­லி­டக்­கோ­ரிக்கை, உயர்­கல்வி, வேலை­வாய்ப்பு, திரு­மண பந்­தங்­க­ளென பல கார­ணங்­களை அடி­யொற்றி இந்த புலம்­பெயர் செயற்­பா­டுகள் நடை­பெற்று வரு­கின்­றன. இவற்றில் சட்­ட­வி­ரோ­த­மான புலம்­பெயர் செயற்­பா­டு­களும் இல்­லா­மலில்லை. ஆகாய மார்க்­க­மாக சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வதில் பல்­வேறு நெருக்­க­டி­யான நிலை­மைகள் இருப்­பதால் அதி­க­ள­வா­ன­வர்கள் தமது உயிர்­களை கூட துச்­ச­மென மதித்து கடல்­மார்க்­க­மாக வெளி­யே­றிய, வெளி­யேற விளை­கின்ற சந்­தர்ப்­பங்­கள் ...

Read More »

அறிவற்ற முரளியுடன் பயணிக்க வேண்டாம்! -கோத்தாவுக்கு அதிரடி ஆலோசனை

நாம் இன்று புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என இவருடன் பயணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது சம்பந்தமாக மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை வீணடிக்கும் ...

Read More »

தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

தென் ஆசியாவின் பாரிய கோபுரம் ஆன தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 350 மீற்றர் உயரம் மற்றும் 17 அடுக்குகளை கொண்ட தாமரை கோபுரமானது 104 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 சதவீதமான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது. இதன் கையளிப்பு நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »