குமரன்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 காவல் துறையினர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலம் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் உள்ள தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள் கட்டிடங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 4 காவல் துறையினர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து ராணுவத்தினரும் காவல் ...

Read More »

அம்மா வேடங்களில் கவனம் செலுத்தும் கௌசல்யா!

முன்னணி நடிகையாக வலம் வந்த சௌசல்யா, நட்பே துணை படத்திற்குப் பிறகு தொடர்ந்து அம்மா வேடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன் உள்பட பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சௌசல்யா. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்தவர் அடுத்து லைலா என்ற படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கிறார். பூதோபாஸ் இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக ...

Read More »

தேவாலய குண்டுவெடிப்பில் சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்?

அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் . அனைத்துவிதமான செய்தி, தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மை தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நாம் தெரிவிக்கும் தகவல் சிலவேளைகளில் நிரபராதிகளை சந்தேக நபர்கள் எனும் போர்வையில் காட்டும். ...

Read More »

கோத்தாவதாரம் – என்.சரவணன்

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான். ஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான். பிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. எதிரி தமது வேட்பாளரை அறிவித்ததும் அதற்குரிய சரியான சதுரங்கக் காயை ...

Read More »

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு!

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ...

Read More »

தரையிறங்கும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

மியான்மரில் 89 பேரும் சென்ற விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனினும், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானம், அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்க முயன்றது. அந்த விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர். அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி ...

Read More »

மைத்திரி சீனா பயணமானார்!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனா நோக்கி பயணமாகியுள்ளார். இன்று காலை 7.35 மணியளவில் யூ. எல். 302 என்ற  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் சீனா பயணமாகியுள்ளதுடன், ஜனாதிபதியுடன் 27 ​பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலக வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகள் சம்மந்தம் என கூறும் போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது, ஆனால் இந்த பொறுப்பில் இருந்து முதலில்  சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர். ஆகவே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ...

Read More »

தேனிலவுக்காக இலங்கை சென்ற இந்திய வம்சாவளி பெண் மரணம்!

தேனிலவுக்காக இலங்கை சென்ற இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் என்பவருக்கும் கடந்த மாதம் 19ம் திகதி திருமணம் நடைபெற்றது. மூன்று வருடங்களாகக் காதலித்தவர்கள் கடந்த மாதம் நடந்த திருமணத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் தேனிலவு பயணமாக இலங்கையின் காலே பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஐந்து ...

Read More »

மெல்பர்ன் நெடுஞ்சாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 92 வயதான முதியவர்!

மெல்பர்னின் Monash நெடுஞ்சாலையில் Mobility ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற 92 வயோதிபர் முதியவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் காவல் துறை  இடைநிறுத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இவ்வீதியில் குறித்த முதியவர் சென்றுகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டி ஒருவர் அம்முதியவரை பாதுகாப்பதற்காக Hazard விளக்கினை ஒளிர்ந்தபடி அவரைப் பின்தொடர்ந்தார். அதேநேரம் காவல் துறைக்கு அறியத்தந்திருந்தார். இதையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் முதியவரை இடைநிறுத்தி பாதுகாப்பாக மீட்டனர். தனது காரில் முதியவரைப் பின்தொடர்ந்த Bruce என்ற ...

Read More »