குமரன்

குமார் குணரத்னத்தின் குடியுரிமையை ரத்து காத்திருக்கும் அவுஸ்திரேலியா

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னவிற்கு இலங்கை குடியுரிமை வழங்க இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்குமாயின் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யலாம் என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னைய ஆட்சி காலத்தின் போது தங்கள் தலைவர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள போதும் இலங்கை குடியுரிமையை மாற்றித்தருமாறு தான் கூறியிருந்ததாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி முன்னிலை சோஷலிசக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவியதால் ...

Read More »

தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ் இளைஞன் சாதனை

நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றினை இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தினைச் (Seed & Planting Material Development Center (SPMDC) சேர்ந்த இராஜேஸ்வரன் சஞ்சீபன் சிறப்பாக வடிவமைத்துள்ளார். இந்த உபகரணத்தை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தைச் சேர்ந்த கே. உதயகுமார் உருவாக்கியுள்ளார். அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப் பாசனத் தொகுதி வடிவமைப்பு ...

Read More »

தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்-சசிகுமார்

புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். நெப்போலியன், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். ‘கிடாரி’ படம் குறித்து சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- கிராமங்களில் திமிர்த்தனமாகவும் அடாவடியாகவும் திரிபவனை ‘கிடாரி’ என்பார்கள். நான் அந்த கதாபாத்திரத்தில் இதில் ...

Read More »

அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்

அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87) மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திய அம்மை நோய்க்கு கடந்த 1960-ம் ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டறிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டொனால்ட் ஏ. ஹென்டர்சன். அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக அம்மை நோயால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் ...

Read More »

102 வயதிலும் பணிக்கு பயணிக்கும் அறிவியலாளர்

அவுஸ்ரேலியாவின் அதிக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall – ஐ பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 102 வயதான David Goodall தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும் ஒரு தொடரூந்து ஆகியவற்றில் ஏறி சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்து Edith Cowan பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்.  இவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்திற்கொண்டு இனிமேல் பல்கலைக்கழக்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்தே அவர் வேலை செய்யலாம் எனவும் அந்த பல்கலைக்கழகம் ...

Read More »

பணிகளுக்கான ஊக்கியாக செவாலியே விருதை உணர்கிறேன்- கமல்

பிரான்ஸ் நாட்டின் மிகஉயரிய ‘செவாலியே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டமைகாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கலை, இலக்கியத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்கான ஊக்கியாக கருதும் இவ்விருதினை எனது ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் ...

Read More »

ஒரு நாள் கிரிக்கெட்- அவுஸ்ரேலியா வெற்றி

சிறீலங்காவிற்கு  எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது அவுஸ்ரேலியா. ஞாயிற்றுக்கிழமை  கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிறீலங்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. அவுஸ்ரேலியாத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டார்க். இந்த மைல்கல்லை ...

Read More »

கறுப்பு ஜுலை“ இரத்தக் களரியை நினைவுகூர்ந்து இரத்த தானம்

“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்துவருகிறது. அந்தவகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும். “இரத்த தானம்”, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை ...

Read More »

மிட்செல் ஸ்டார்க் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் போட்டியில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மிட்செல் ஸ்டார்க் 2-வது விக்கெட்டாக தனஞ்செயா டி சில்வாவை 2 ரன்னில் ஆட்டம் இழக்க வைத்தார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த போட்டிக்குப்பின் ஸ்டார்க் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். தற்போது ...

Read More »

அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அவுஸ்ரேலிய நாட்டிற்கு வெளியே உள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தை மூடுமாறு வலியுறுத்தி அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தடுப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவின் பிரதான நகருக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். பசுபிக் தீவான நவ்றூ மற்றும் பப்புவான நியூகினியிலுள்ள மனூஸ் தீவு ஆகியவற்றிலுள்ள தடுப்பு நிலையங்களில் பணியாற்றியவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தடுப்பு நிலையங்களில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ...

Read More »