குமரன்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்யும் இசையமைப்பாளர்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்வதாக இசையமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை. அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார். தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ...

Read More »

மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது! – நிலாந்தன்

2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட ...

Read More »

கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயார்!

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை ...

Read More »

தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை தகர்ந்தது!

இந்த நாடாளுமன்றத்தில், புதிய அரசமைப்பு ஒன்று உருவாகுமென்றும் அதில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பங்களிப்பு முழுமையாக இருக்குமென்றும் நம்பினோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இப்போது நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில்லை. அது தகர்ந்துவிட்டது என்றார். மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஜனாதிபதியோ, அரசாங்கமோ நிராகரித்தால், அரசியல் தீர்வை நிராகரித்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கிடைக்குமெனக் கேட்ட அவர், அரசியல் ரீதியாக நாங்கள் வேறுபட்டாலும் கூட நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ...

Read More »

வர்த்தகர்களுக்காக தினமும் வரிச் சலுகை வழங்க முடியாது!

வர்த்தகர்களுக்காக தினமும் வரிச்சலுகை வழங்க முடியாதென, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று (12) நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் என்றார். அத்துடன், புதிய வர்த்தக செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சிகள்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் வில்லாவுட் தடுப்பு முகாமில் 27 வயது ஆப்கான் அகதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே முகாமில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஈராக் அகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற ஆப்கான் அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 முதல் தடுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அந்த அகதியின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். “ஆஸ்திரேலிய அரசு வேண்டுமென்றே குடிவரவு ...

Read More »

சிவகார்த்திகேயன் படத்தில் இளம் இசையமைப்பாளர்!

கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் புதிய படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இளம் இசையமைப்பாளர் ஷபீர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த ...

Read More »

சந்தர்ப்பவாத அரசியல்!

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது.  அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த ...

Read More »

இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல்!

இந்தியாவில் நடக்கவுள்ள 17வது நாடாளுமன்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 11-ந்திகதி தொடங்கி மே 19-ந்திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியாவில் 17வது நாடாளுமன்ற தேர்தலான இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தல் என்ற பெருமையை பெறுகிறது. தேர்தலுக்காக நாடு முழுக்க அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பதிலும் வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக உள்ளனர். தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் ...

Read More »