ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடித்து ...
Read More »குமரன்
“என் கோபத்துக்குக்கூட அவர்கள் தகுதியற்றவர்கள்!” கெளரி லங்கேஷின் தங்கை கவிதா
உலகம் முழுவதும் இருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு 2017ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு எனக் கூறலாம். கடந்த ஆண்டு மட்டும் , தங்களின் வேலைக் காரணமாக , உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை …46! அதில் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர் ..கர்நாடகாவைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் உட்பட! 2017ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூரில், காந்தி நகரிலுள்ள தன் அலுவலகத்திலிருந்து , ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள தன் வீட்டிற்கு திரும்பியபோது, மூன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி லங்கேஷ். இந்த கொலை வழக்கில், ...
Read More »சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்!
சீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார். இதற்கு ...
Read More »யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் ஒளிப்படக் கண்காட்சி!
யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்கள் இருளென்பது குறைந்த ஒளி என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியையும், விவரணப்படங்கள் திரையிடலையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தி இருந்தனர். ஊடகக் கற்கைகள் மாணவர்களது தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ஒளிப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டன. குறித்த ஒளிப்படங்கள் யாவும் இயற்கை ஒளியமைப்பைப் பயன்படுத்தியே பதிவுசெய்யப்பட்டவை என்பதுடன், மக்களின் பண்பாடு, பொருளியல், சமூக வாழ்க்கை, சுற்றுச் சூழல் என்பவை இவற்றின்வழி வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகக் கற்கைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ...
Read More »ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மைத்திரியிடம் கையளிப்பு!
“சிறுவர்களைப் பாதுகாப்போம் ” தேசிய செயல்திட்டம் தொடர்பான சிறிலங்கா ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டில் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் கையளிக்கப்பட்டது. தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக,அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்துப் போராட்டங்களை ...
Read More »பேச்சுவார்த்தைகளால் தீர்க்க முடியாததை துப்பாக்கிகளால் நிச்சயம் தீர்க்க முடியாது!
ஒரு பத்திரிகையாளரின் இறுதிச் சடங்கில் ஏன் இத்தனை பேர் கூடவேண்டும் என்கிற கேள்வி அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் தனிச்சையாக எழுந்தது. கொள்கைகளால் பிரிவுபட்டிருந்த காஷ்மீரின் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் பலத்த மழைக்கு இடையே சையது சுஜாத் புகாரி குடும்பத்தின் கல்லறைத் தோட்டத்தில் அவரை நல்லடக்கம் செய்யக் கூடியிருந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தங்களின் அமைதியான வாழ்வுக்காக போராடியவரை இறுதியாகப் பார்க்க வந்ததில் ஆச்சரியம் இல்லைதான். சகபத்திரிகையாளர்களே மக்களுக்கான சுஜாத்தின் பங்களிப்பை விவரிக்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகத் ...
Read More »விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வாட்ஸ்அப்!
விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக ...
Read More »ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக சர்வதேச யோகா தினம்!
ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். ஜுன் 21-ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ...
Read More »ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பலன் யாருக்கு?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பிறகு நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டரில் இவ்வாறு பதிவிடுகிறார் ‘நம்முடைய மிகப்பெரிய மற்றும் மிக ஆபத்தான பிரச்சினை வட கொரியா என்று அதிபர் ஒபாமா சொன்னார். இனிமேல் அப்படி இல்லை. இன்றிரவு நிம்மதியாக உறங்குங்கள்’. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. அதுபோல, கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்குப் பிறகு தனது பழைய நடவடிக்கைகளை மறக்கச் செய்து, ஒரே இரவில் ஒபாமாவின் ...
Read More »6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம்!
உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6-வது இடத்துக்குச் சரிந்து, பாகிஸ்தானுக்கும் கீழாகச் சென்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை அடைந்த காரணத்தால், தரவரிசைப்பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது. 6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம் என்றேதான் கூற முடியும். இதற்கு முன் கடைசியாக தரவரிசைப்பட்டியலில் 6-ம் இடத்தில் கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலியா இருந்தது அதற்குப்பின் இப்போது சரிந்துள்ளது. இங்கிலாந்து ...
Read More »
Eelamurasu Australia Online News Portal