குமரன்

மைத்திரியின் வேண்டுதலை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் தீடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பிற்கு அழைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சந்திப்பில் நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை ...

Read More »

ரணில் மீதான நம்பிக்கையை காட்டும் பிரேரணை இன்று!

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரிலியல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திம்பம்பரம், மங்கள சமரவீர மற்றும் ரிசாத் பதியுத்தீன் ஆகியோர் இந்த யோசனையை சமர்ப்பித்துள்ளனர். எவ்வாறாயினும் இன்றை சபை அமர்வில் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் ...

Read More »

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏன் ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றது?

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா். சமகால அரசியில் நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்ற போது அக் கட்சியின் 14 பேருமாகவே முதல் இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள். இதில் ...

Read More »

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன!

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. . இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான ...

Read More »

சிறிசேன என்ற நோய்க்குறி!

அக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள் முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று தனது முரண் இயல்புகளையே நிலைபேறானவையாகக்கொண்ட ஒரு ஜனாதிபதியும் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும் ஜே.வி.பி.போன்ற சிறிய கட்சியும் எதிர்காலச் சந்ததிகளின் நலனுக்காக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஐக்கியப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட விதிவசமான ...

Read More »

‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ – ஜமால் கசோக்கியின் கடைசி நிமிடங்கள்

தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவானஒலிப்பதிவு பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் திகதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஒலிப்பதிவு  குறித்து சி.என்.என். டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் ...

Read More »

ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற ...

Read More »

அவுஸ்திரேலியாவில் உணவகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் உள்ள Fast-Food உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுப்பபதாக தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து சில வேளைகளில் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது எனவும் நாடளாவிய ரீதியில் இந்த உணவகங்களில் பணிபுரிபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆத்திரம் கொண்ட வாடிக்கையாளர்கள் உடல் ரீதியான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. வேறு சிலர் தேனீர் போன்ற சுடுபானங்கள், burger போன்ற உணவுப்பொருட்கள், சிகரெட்களை பணியாளர்களின் மீது எறிவதாகவும், அத்துடன் பாலியல் ரீதியான சொற்களை பிரயோகிக்கின்றனர் எனவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை உணவங்களில் ...

Read More »

தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்!-ஜேம்ஸ் டவுரிஸ்

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய உருவாக்கும் தீர்ப்பாக அமையும் என சிறிலங்காவிற்கான பிரித்தானிய   உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர்கள் பல தலைமுறைக்கு ...

Read More »

கங்காருவை இழந்து வாடும் அவுஸ்திரேலிய மக்கள்!

அவுஸ்திரேலியாவில், தனது கட்டுடலால் இணையத்தில் பிரபலமாகிய ரோஜர் என்றழைக்கப்படும் கங்காரு, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. 12 வயதான குறித்த கங்காருவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் Kangaroo Sanctuary Alice Springs அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 90 கிலோ எடையும் 2 மீட்டர் உயரமும் கொண்ட கங்காரு இணையவாசிகளின் செல்ல கங்காருவாக காணப்பட்டது. 2015இல் ரோஜர் உலோக வாளி ஒன்றை உடைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவியது. அதனைத் தொடர்ந்து ரோஜரின் சாகசங்களைக் காட்டும் காணொளிகள் இணையவாசிகளிடையே மிகவும் பிரபலமடைந்தன. முதுமையின் காரணமாக ரோஜர் மாண்டதாக, ...

Read More »