குமரன்

”ஒரு மாதத்திற்குள் கொரோனா நபரொருவரிலிருந்து 403 பேருக்கு பரவும்” -விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய

கொரோனா வைரஸானது ஒரு மாதத்திற்குள் நபரொருவரிலிருந்து சுமார் 403 பேருக்கு மிக வேகமாக பரவக் கூடியளவு ஆபத்தானது எனத் தெரிவித்த விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய. இதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்டவற்றுக்காகவே தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு ...

Read More »

ஜோர்டானில் சிக்கித்தவிக்கும் பிருத்விராஜ்

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற நடிகர் பிருத்விராஜ், இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித்தவிப்பதாக கூறியுள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிளஸ்ஸி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் உள்ள பாலைவனத்தில் நடத்த பிருத்விராஜும் படக்குழுவினரும் அங்கு சென்று இருந்தனர். ...

Read More »

போலித் தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்த புலனாய்வுப்பிரிவு நடவடிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலித் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டப்படுத்தவதற்காக புலனாய்வுப்பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அபாயமிக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 22மில்லியன் இலங்கையர்களையும் பாதுகாப்பதற்காக முப்படையினரும், காவல் துறையினரும் , அனைத்துப்பிரிவு புலனாய்வுத்துறையினரும் நேரம் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு மூன்று தசாப்த போரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கைவாழ் பொதுமக்கள் எவ்வாறு ஒத்துழைப்புக்களை நல்கினார்களோ அதேபோன்று கொரோனா வைரஸையும் நாட்டிலிருந்து ...

Read More »

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகர் ஒருவர் மூலம் இவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் இந்து மதத்தவரான தாவடிப் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் சிவானந்தன் என்ற கட்டட ஒப்பந்தகாரர் என்றும் தெரியவந்துள்ளது. கட்டட ஒப்பந்தம் தொடர்பிலே குறித்த போதகரைத் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் என்று தெரிவித்து அவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. எனவே இந் நபருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

Read More »

யாழ்ப்பாணம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு!

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  குறித்த மாவட்டங்களில் 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும். இம் மாட்டங்களிலுள்ள மக்களுக்கு வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸர்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த கொரோனா தொற்றுக்குள்ளான ...

Read More »

காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க – சேரன்

 காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க என இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி என்ற தரமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே ’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் சேரன் கதாநாயகனாக நடித்த ‘ராஜாவுக்கு செக்’ படம் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா வர்மா ஆகியோர் ...

Read More »

கரோனா லாக்-டவுன்; காற்றின் தரம் உயர்ந்தது!

கரோனா பாதிப்பு காரணமாக வெறிச்சோடிய சாலை மற்றும் மூடப்பட்ட தொழிற்சாலைகளால் பல்வேறு நாடுகளில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா, கடந்த மாதம் வூஹானில் நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவு குறைந்துள்ளதாகப் புகைப்படங்களை வெளியிட்டது. சீனா நகரமான வூஹானில்தான் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தொற்று பரவலானதால் நகரமே லாக்-டவுன் செய்யப்பட்டது. தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், சாலைப் போக்குவரத்து, தொழில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ...

Read More »

கோவிட்-19-க்கு எதிரான வாக்சைன் எப்போது தயாராகும்?

உலகம் முழுதும் கரோனா என்ற வைரஸ் பரவி சுமார் 11,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், உலகம் முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்துதான் என்ன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வாக்சைன் தயாரிப்பில் சில சோதனைக்கூடங்கள் ஈடுபட்டுள்ளன. இதுவரை நடந்தது என்ன? சீன ஆராய்ச்சியாளர்கள் நாவல் கரோனா வைரஸ் மரபணு வரிசையை அமெரிக்காவுக்கு அனுப்பிய 100 நாட்களுக்குப் பிறகு முதற்கட்ட மருத்துவ சோதனை 18 வயது முதல் 55 வயதினையுடைய 45 ஆரோக்கியமான நபர்களுக்கு அமெரிக்காவின் சியாட்டிலில் நடத்தப்பட்டது. இதுதவிர வேறுபட்ட வாக்சைன் அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் சோதனை ...

Read More »

அனுராதபுரம் சிறைச்சாலை வன்முறை! -இரு கைதிகள் பலி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து இடம்பெற்ற வன்முறையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்த நிலையில், உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது. சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது இரு கைதிதகளும் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது ஒரு கைதி உயிரிழந்த நிலையில் மற்றைய கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயமடைந்த 3 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ...

Read More »

கொரோனாவிற்கெதிராக போராடுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இத்தொற்று ஏற்பட முன்னர் மக்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்கம் அறிவித்தல்களை வழங்கிவருகின்றது. அத்தோடு ஆயுர்வேத மருத்துவர்கள் சில மருந்து வகைளை பயன்படுத்தவதன் மூலம் இத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியுமென பரிந்துரைக்கின்றனர். அதாவது, இக்கொரோனா தொற்று பரவுவதற்கு இடம்கொடுக்காது, எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால், இந்நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்காக ...

Read More »