எனது தந்தை(கமல்ஹாசனின்) எதையும் யோசித்தே பேசுவார். வாழ்க்கையில் இதுபோல் நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார் என்று அக்ஷராஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வியொன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதில் அளித்து இருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டின. கமல்ஹாசன் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ...
Read More »குமரன்
புதிய பரிசோதனை மூலம் காசநோயை 1 மணிநேரத்தில் கண்டுபிடிக்கலாம்
புதிய பரிசோதனை மூலம் காசநோயை 1 மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் கொல்லி நோய்களில் காச நோயும் ஒன்று. இது உலக அளவில் மிக முக்கியமான நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் இந்த நோயினால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 20 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். காச நோயை உருவாக்கும் பேக்டீரியாக்கள் பல ஆண்டுகளாக நோயாளியின் நுரையீரல் திசுக்களில் தங்கி உயிர் வாழ்கிறது. பின்னர் உடலில் பல உறுப்புகளில் ...
Read More »அவுஸ்ரேலியாவில் மருத்துவரை சந்திக்கும் போது…..
உடல் நிலை சரியில்லை என்றால் ஒவ்வொருவரும் நாடுவது அவர்களின் குடும்ப வைத்தியரை. ஆஸ்திரேலியாவில் குடும்ப வைத்தியர் GP என்று அழைக்கப்படுவர். அவுஸ்ரேலிய குடியுரிமை உடையவர்கள், நிரந்திர வதிவிட உரிமை கொண்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் குடும்ப வைத்தியர் மற்றும் நிபுணர்களிடம் இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவ ஆலோசனை பெறலாம். பல்வேறு விதமான உடல் நல, மனநல பிரச்சனைகளுக்காக நீங்கள் குடும்ப வைத்தியரை அணுகலாம். குடும்ப வைத்தியரிடம் கட்டணம் செலுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற நீங்கள் Medicare அட்டை வைத்திருக்க ...
Read More »அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியை தாக்கிய ‘டெப்பி’ புயல்
அவுஸ்ரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. அவுஸ்ரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3-வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல ...
Read More »அவுஸ்ரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் சென்ற பாம்பு!
அவுஸ்ரேலியாவில் பலவகையான பாம்புகள் காணப்படும் நிலையில், நமது அண்டைநாடான நியூசிலாந்து மக்கள் பாம்புகளின் தொல்லையின்றி வாழ்கிறார்கள். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேர்னிலிருந்து நியூசிலாந்துக்கு brown tree வகை பாம்பொன்று தனியார் சொகுசு விமானத்தில் பறந்து சென்றிருக்கிறது. பிரிஸ்பேர்னில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் சில்லு வழியாக உள்ளே சென்ற பாம்பு, Auckland விமானநிலையத்தைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதை அவதானித்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பாம்பை அப்புறப்படுத்தினர். இதேவேளை குறித்த பாம்பு பலவீனமான நிலையில் இருந்ததாகவும், விலங்குவாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் கொலை செய்யப்படவுள்ளதாகவும் ...
Read More »சமுத்திரகனி படத்திலிருந்து வெளியேறிய வரலட்சுமி
வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார். சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த ‘அப்பா’ படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு ‘ஆகாச மிட்டாயீ’ என்று பெயர் வைத்துள்ளனர். சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, வரலட்சுமியே தனது ...
Read More »அவுஸ்ரேலியாவை மிரட்டும் புயல்!
அவுஸ்ரேலியாவை புயல் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், அந்நாட்டின் வடக்கு பகுதியான குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குவின்ஸ்லாந்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 140 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் பலத்த காற்றுடன் மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் உட்பட குவின்ஸ்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெளியேறுவதற்காக ரெயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) புயல் வீசும் என்று எச்சரிக்கை ...
Read More »மூளையிடன் கணனியை புகுத்தும் திட்டம்!
மனித மூளையுடன் கணனிகளை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் இணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும். மேலும் இவற்றை கொண்டு மனிதர்களின் நினைவாற்றலை ...
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்!
தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக ...
Read More »அவுஸ்ரேலியாவை மிரட்டிய சைனா-மேன் பவுலர்
இந்தியா -அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இதில் அறிமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்கினார். இது இவருக்கு முதல் போட்டி. அறிமுகமான முதல் போட்டியிலே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ...
Read More »
Eelamurasu Australia Online News Portal