குமரன்

பாகுபலி இசையமைப்பாளரின் திடீர் முடிவு

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் எம்.எம்.கீரவாணி. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்பட சுமார் 220 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். சர்வதேச அளவில் வெற்றி பெற்ற பாகுபலி படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் இந்திய அளவில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடமாக இசைப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடம் மரகதமணி என்கிற பெயரிலும் நன்கு அறிமுகமானவர். தற்போது ராஜமவுலி ...

Read More »

அஞ்சலி செலுத்த முடியாத அவலநிலை

அச்சுறுத்தல்கள் அடக்குமுறைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள ராஜபக்ஸக்கள் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் மீது கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான அணுகுமுறையின் அப்பட்டமான வெளிப்பாடாக இந்த நெருக்குதல்கள் அமைந்திருக்கின்றன. அதனைத் தெளிவாகக் காண முடிகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அந்த மண்ணில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகி அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்ற ஒரு நிகழ்வு. வருடந்தோறும் நடைபெறுவது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறுவது. ...

Read More »

முதுகெலும்பு இருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருந்து விலகுங்கள்

சிறிலங்கா  அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.பொதுச் சபையில் இருந்து விலகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் போர் வெற்றி விழா உரை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் ...

Read More »

விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் அரச பயங்கரவாதமே!

இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின் இன விடுதலைக்காகவே இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன அவை பயங்கரவாதப் போராட்டம் அல்ல, உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 11 ஆவது போர் வெற்றிவிழாவில் ஜனாதிபதி கோத்தாபய ;ராஜபக்ஷ ஆற்றிய உரை தொடர்பில் ஊடங்களுக்குக் கருத்துக்களை பகிரும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போராட்டம் தொடங்குவதற்கு மூல ...

Read More »

உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிற அமெரிக்கா, அந்த அமைப்புக்கு கெடு விதித்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக செயல்படுவதை நிரூபித்து காட்டாவிட்டால் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம் என கூறி உள்ளது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் திகதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் ...

Read More »

11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு

அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டாகுரூஸ் மாகாணத்தில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புகூடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால் என்ற தன்னார்வலர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘எல்பிரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். அந்த படிமத்தை ஆராய்ந்தபோது ...

Read More »

ரசிகர்களை கவர்ந்த சாந்தனு – கீர்த்தி குறும்படம்

ஊரடங்கு நேரத்தில் தன் மனைவி கீர்த்தியுடன் இணைந்து சாந்தனு எடுத்த குறும்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். காலை எட்டு மணிக்கு அலாரம் அடிக்கும் போது சாந்தனு தூக்கத்திலிருந்து கண் விழிப்பதாக அந்த குறும்படம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து காலையில் காபி ...

Read More »

தமிழர்களுக்கு மிரட்ட விடுத்த பிரியங்க பெர்ணாண்டோவிற்கும் பதவி உயர்வு!

பிரித்தானியாவிற்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவேளை கொலைமிரட்டல் சமிக்ஞைவிடுத்ததன் காரணமாக சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மேஜர் ஜெனரல் தர அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பிரியங்க பெர்ணாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதை இராணுவ ஊடக பிரிவு உறுதி செய்துள்ளது. பிரியங்க பெர்ணான்டோ உட்பட ஐவர் மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.2018 ம் ஆண்டு பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் சுதந்திர கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பிரியங்க பெர்ணான்டோ மரண அச்சுறுத்தல் சமிக்ஞை செய்தமை காணொளி மூலம் ...

Read More »

மங்கள சமரவீரவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இருந்து வெளியேறியுள்ளார்.

Read More »

‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகத்துடன் இயக்கப்படும் 12 லாரிகள்

 பொதுமக்களுக்கு ‘கொரோனா’ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துபாய் போலீசார் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 12 லாரிகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் அந்த லாரிகள் மூலம் வசதியற்ற மக்களுக்கு இலவச உணவு பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. துபாயில் ‘கொரோனா’ பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் காவல்  துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நகரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ‘கொரோனா’ விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பணியில் மொத்தம் 12 லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த லாரிகளின் ...

Read More »