தென்னிந்திய நடிகையும், பிக்பாஸ் வெற்றியாளருமான ரித்விகா, தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், அறிமுக இயக்குனர் அரவிந்த் சாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “ரௌத்திரம்” கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. இப்படம் ...
Read More »குமரன்
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கோவிட்!
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ளநிலை ஒரு ‘தேசிய அவசரநிலை’ என்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant விவரித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 136 பேரில் 77 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 59 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார். இவர்களில் ஆகக்குறைந்தது 53 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
Read More »பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்
பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசானது பயங்கரவாத தடைச்சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது என கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைது செய்யவும், தடுத்து வைக்கவும், சித்திரவதை செய்;யவும் மற்றும் செய்யப்படாத குற்றத்திற்கு தண்டனையளிக்கவுமே வழிவகுக்கிறது. இச்சட்டம் இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் பற்றி சர்வதேச கடமைகளை மற்றும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறினாலும், அடுத்தடுத்து ஆட்சியினை பொறுப்பேற்ற அரசாங்கங்கள் இச் சட்டத்தினை ...
Read More »உலக அளவில் 75 சதவீதம் கடந்த டெல்டா வகை கொரோனா
இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா ...
Read More »‘எதற்கும் துணிந்தவன்’
நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவரது புதிய படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ...
Read More »சிறிலங்காவில் நீதிமன்ற கட்டமைப்பு எதற்கு?
நாட்டின் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் வழங்கிய தண்டனையை ரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் முடியுமென்றால் நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு எதற்கு? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த சம்பவம் பொய்யென்றால் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்யாது துமிந்த சில்வாவை மாத்திரம் விடுதலை செய்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவின் விடுதலையின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் எழுதி வைக்கப்பட்டுள்ள ‘சிறைச்சாலை கைதிகளும் மனிதர்கள்’ ...
Read More »ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் !-ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன்
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க தேவையில்லை. சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் என ரெலோ கண்டனத்தை தெரிவித்துள்ளது ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் இதனை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பலதரப்புடக்கள் இந்த சட்டத்தினால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ...
Read More »கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர். இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி ...
Read More »அவுஸ்ரேலியாவில் 80% முஸ்லீம்கள் பாகுபாட்டினை அனுபவிக்கிறார்கள்!
முஸ்லிம்கள் நேற்று (21) ஈகைத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் நாட்டிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருவித பாகுபாட்டினை அனுபவித்திருப்பதை ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் கடந்தவாரம் வெளிப்படுத்தியுள்ளது.
Read More »கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
ஈழத்தமிழரின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகவும் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூர தடை உத்தரவு வழங்கி நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது. சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்த பின், ஒரு குழுவினருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு குழுவினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிசார் மன்றுக்கு தெரிவித்தனர். பொலிசாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் மூதூர் நீதவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச ...
Read More »