நாட்டின் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் வழங்கிய தண்டனையை ரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் முடியுமென்றால் நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு எதற்கு? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் பொய்யென்றால் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்யாது துமிந்த சில்வாவை மாத்திரம் விடுதலை செய்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவின் விடுதலையின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் எழுதி வைக்கப்பட்டுள்ள ‘சிறைச்சாலை கைதிகளும் மனிதர்கள்’ என்ற வாசகத்தை மாற்றி பணம் படைத்தவர்கள், அதிகாரம் கொண்டவர்கள் மாத்திரமே மனிதர்கள் என்று எழுத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறி வாக்குகளை பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ இந்த பொது மன்னிப்பு வழங்கியதை அடுத்து அவருக்கு வாக்களித்த மக்களின் அதற்கு எதிராக குரல் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் ஊகமே தவிர வேறு ஒன்றும் இல்லை என ஹிருனிகா பிரேமச்சந்திர கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்
Eelamurasu Australia Online News Portal