ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015- 2017 ஆண்டுகளில் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரை கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தி வர்த்தகம் செய்ததாக சய்யத் பார்ஷ்சி (46) மற்றூம் நகஹ்மே மோஸ்தாபே (45) என்ற தம்பதியனர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழுநாட்களும் 14 மணிநேரம் அவர்கள் வேலை வாங்கியதாக ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெர்ஷிய புத்தாண்டு மற்றும் ரமலான் நோன்பின் போதும், நீண்ட நேரம் வேலைவாங்கியாதாகவும் மூன்று ...
Read More »குமரன்
மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி!
நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு ...
Read More »பாலித தெவரப்பெரும, ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!
களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டன் என்பீல்ட், நோனாதோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று நோனாதோட்டத்தில் ஸ்ரீ செல்வவிநாயக ஆலயத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 11 மணியளவில் இடம்பெற்றிருந்தது. உண்மையாக சேவை செய்யும் தலைவர்களை இணங்காண்போம், ஏமாற்று தலைவர்களை வெளியேற்றுவோம், ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண ...
Read More »மீண்டும் நடிக்க வரும் அசின்!
அஜித், விஜய் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த அசின், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர்கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்துகொண்டு செட்டில் ஆனார். ஒரு பெண் குழந்தைக்கும் தாய் ஆனார். இனிமேல் நடிக்க வரமாட்டார் ...
Read More »ரணிலா? சஜித்தா? பந்து பங்காளிக்கட்சிகளிடம்….
ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகளிலும் அரசியல் பேச்சுக்களிலும் ஈடுபட்டுவருகின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் ஈடுபட்டுவருகின்ற சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஜனாதிபதி தேர்தலை நோக்கியான மக்கள் கூட்டங்களை நடத்திவருகின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ ...
Read More »வறுமையால் பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைந்த தந்தை!
வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் காவல் துறை நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டபோது பௌத்த தேரரிடமிருந்து இரு பிள்ளைகளையும் அழைத்துவருமாறு தாய், தந்தை இருவருக்கும் காவல் துறையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் வவுனியாவில் வசித்து வரும் குடும்பம் ஒன்று வறுமை காரணமாக தமது ...
Read More »பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்!
விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ...
Read More »காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும்!
காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இது குறித்து ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்து பல்கலைக்கழகமும் விவாதித்து வருகின்றன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அந்த மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் ...
Read More »துலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்!
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜனாதிபதி தேர்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் முன்னிலையில் விளங்குபவர் குறித்து இதுவரையில் எந்தவிதமான தெளிவும் இல்லாத நிலையொன்று இருப்பது கவனிக்கத்தக்கது. குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் நாட்டில் சகல வற்றையும் நேர்த்தி செய்யக் கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கருதப்படுகின்ற கோதாபய ராஜபக்ஷ உட்பட எந்தவொரு ...
Read More »