யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன.
Read More »குமரன்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இரு கிரிக்கெட் வீரர்கள்!
இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, ‘நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து ...
Read More »அவுஸ்ரேலியாவில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு!
கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆஸ்திரேலியாவில் மத்திய காவல் துறை படையின் துணை கமிஷனராக இருந்து வந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் ...
Read More »ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை!
அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது தொடர்பாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வடகொரிய அரசுகளின் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள வடகொரியா, இது தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. இருதரப்பும் இருவேறு கருத்துகளை வெளியிட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் ...
Read More »நடிகையை பரிந்துரை செய்த சந்தானம்!
கண்ணன் இயக்கும் புதிய படத்தில், தனக்கு ஜோடியாக நடிக்க ஏ-1 பட நடிகையை நடிகர் சந்தானம் பரிந்துரை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ ‘ஏ 1’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதேபோல், சந்தானம் நடித்துள்ள `சர்வர் சுந்தரம்’, `ஓடி ஓடி உழைக்கணும்’, `மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. தற்போது ...
Read More »இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்!
2009 மே 21 ம் திகதி ராஜீவ்நாகநந்தன் தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார். நாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார். இலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர். இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர். பிரிட்டன் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக ராஜீவ் செல்லவுள்ளதை கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்த ராஜீவும் அவரது நான்கு நண்பர்களும் கடத்தப்பட்டனர். மே 21 ம் திகதி அவர் தாயுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே இறுதி தொலைபேசி ...
Read More »ஐ.நா சபையில் ஒலித்த 15 வயது தமிழ் சிறுமியின் குரல்!
ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பல நாடுகளில் இருந்து ஆர்வலர்கள் உட்பட பல பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஆற்றிய உரை, உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. அவரை போன்றே 15 வயதையுடைய இந்திய தமிழ் சிறுமி ஒருவரும் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியிருந்தார். இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து போட்டியின் அடிப்படையில் பத்து மாணவ ...
Read More »சிவாஜிலிங்கத்தை தேர்தலில் இருந்து விலக கோரிக்கை! – சிறிகாந்தா
ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்தை கோருவதுடன், அமைப்பு விதிகளுக்கமைய ஏனைய நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ரெலோவின் தலைமை குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அது தொடர்பாக ஆராய்வதற்காக ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் நேற்று கூடியது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியினுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக கட்சியின் அனுமதியின்றி சுயேச்சை வேட்பாளராக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்து ...
Read More »யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் நியமனம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் ...
Read More »7 பேர் விடுதலையை எதிர்ப்பதா? காங்கிரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது. பஞ்சாபில் ...
Read More »