குமரன்

கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரசினை உருவாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிவிப்பு!

கொரோனோவைரசினை பிரதிபலிக்கும் வைரசினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். முக்கியமான இந்த முயற்சி காரணமாக கொரோனோவைரசிற்கான தடுப்புமருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் துரிதமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பேர்னின் பீட்டர் டொகெட்ரி நிறுவகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே கொரோனோ வைரசினை பிரதிபலிக்கும் வைரஸ்களை உருவாக்கியுள்ளனர் தொற்று நோய்க்கு உள்ளான நபர் ஒருவர் மூலம் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் குறித்த சரியான தகவலை பெற்றுக்கொள்ள உதவும் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வைரசினை ...

Read More »

பொன்னியின் செல்வன் மேக்கிங் பிரமிப்படைய வைத்தது!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக ...

Read More »

இளைஞர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

சில நாட்களுக்கு முன்பு, தலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று, தாய் முடிவெட்டிவிடச் சொன்னதால், பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி செய்திகள் வெளியாகின. அதைப் பற்றிய தகவல்கள் மனதைப் பிய்த்தன: ‘கணவனைப் பிரிந்து ஒரே மகனுடன் வாழும் தாய், மகனும் தற்கொலை செய்துகொண்டதால் தனி மரமானார்’. அந்தத் தாயின் துயரத்துக்கு நடுவே, இன்றைய ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மைகளும் முக்கியம்: இது தலைமுடி பற்றிய விஷயம் இல்லை. ஒரு முழு மனிதனாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருந்த, தன் வாழ்வின் முடிவுகளைத் தானே எடுக்க விரும்பிய, ...

Read More »

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த புதிய மந்திரம்!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மந்திரம் ஒன்றை உச்சரிக்கும் படி கூறியுள்ளார். “ஓம் தரே ட்டுரு சோஹா” இந்த மந்திரத்தை எல்லாரும் சொல்லுங்க.. இதை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்று திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா தெரிவித்துள்ளார். <p>சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏதாவது அறிவுரை சொல்லும்படி, தலாய்லாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில், திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வசித்து வருகிறார். ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது!

சீனா எங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் பரவலாக உள்ள நிலையில், அப்பதற்றம் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல் பகுதியினூடாக 6 சீனர்கள் நுழைய முயன்ற சம்பவம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த ஆறு சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் ...

Read More »

கரோனா வைரஸை எதிர்கொள்ள எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா

கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் சீனாவிடம் உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் ...

Read More »

கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல்!

சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று போட்டுவிட்டு செய்யமுடியாத ஒன்றை செய்வோம் என்று கூறுவது எங்கள் மக்களுக்கு நியாயமானது அல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியளார் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கால அவகாசம் எங்களுக்கு எவரும் கொடுத்தது கிடையாது ஊடகங்களுக்கும் மூன்று நான்கு வருடங்களாக விளங்கப்படுத்தியும் அதனை விளங்கமாட்டோம் என்று தலைகீழாக நிற்கின்றார்கள். ...

Read More »

உலகையே அச்சுறுத்தும் கரோனா!

சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடிய வைரஸ் சீனா மட்டுமன்றி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹான். அந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்தனர். கடந்த டிசம்பர் இறுதியில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்தது. வைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், ...

Read More »

சினிமாவில் நிலைத்திருக்க அதுதான் முக்கியம் – ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ஸ்ரேயா, சினிமாவில் நிலைத்திருக்க அதுதான் முக்கியம் என தெரிவித்துள்ளார். தமிழில் விஜய், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் அடுத்தடுத்து ...

Read More »

தமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்!

தமிழில் புதிய படங்கள் இல்லாத தமன்னா, தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா, தனது வாழ்க்கையை மாற்றிய இரண்டு புத்தகங்களைப்பற்றி கூறினார். அதாவது, நான் அதிகமாக புத்தகங்களை படிக்க மாட்டேன். ஆனபோதும் நான் படித்த இரண்டு புத்தகங்கள்தான் எனது வாழ்க்கையே மாற்றின. ஓஷோவின் உண்மையான பெயர் என்ற புத்தகத்தை பிடித்தபிறகு ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாட்டையும், புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அதையடுத்து, ரோரி ப்ரீட்மேன் மற்றும் கிம் பர்னூயின் எழுதிய ஸ்கின்னி பிட்ச் ...

Read More »