தமிழ், இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகை ராதிகா ஆப்தே லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனிடிக் டெய்லரை திருமணம் செய்து அங்கேயே வசிக்கிறார். தற்போது இந்தியா திரும்பி உள்ள அவர் கூறும்போது, “நான் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் விமானத்தில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது இந்தியா திரும்பியபோது, விமானத்தில் கூட்டமே இல்லாமல் காலியாக இருந்தது. என்னை பத்திரமாக இருக்கும்படி ...
Read More »குமரன்
கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க திரிஷா சொல்லும் அறிவுரை
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க நடிகை திரிஷா அறிவுரை கூறி காணொளி வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு திரையுலகமும் தப்பவில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கி உள்ளது. நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில், நடிகை திரிஷா கொரோனா விழிப்புணர்வு காணொளி வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “கொரோனா வைரஸ் அல்லது கோவிட் ...
Read More »கொரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்து பெயர்!
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18-ம் தேதி அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில், ‘அமெரிக்க மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு ...
Read More »கொரோனா குறித்து இன்றைய நாளில் தற்போது வரையான நிலவரம்
கொரோனாவால் டுபாய்,சிங்கப்பூரில் முதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் தனிமைப்படுத்தலுக்கு உதவு ஆயுத படைக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில், கொரோனாவின் தாக்கம் குறித்து இன்றைய நாளில் தற்போதுவரையான ஒருபார்வையே இது, சீனாவின் நிலை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் (வெள்ளிக்கிழமை) சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதை அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு சென்ற 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட முதல் ...
Read More »கொரோனா உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள்!
வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் அது உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் எனவே தேவையற்ற அச்சங்களை விடுத்து ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வைகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலகம் இன்று ...
Read More »இலங்கையில் கொரோனா வைரஸ் 72ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
Read More »பொதுமக்கள் பாதுகாப்புக்காக தனிமனித சுதந்திரத்தை தியாகம் செய்வது குடிமைக் கடமை!
கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் 2,43,162 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 10,284 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது தீய முகத்தைக் காட்டி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 40க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று பரவியுள்ளது. இதில் அபாயம் என்னவெனில் இவர்களுக்கு கரோனா தொற்று எப்படிப் பரவியது, இதனை இவர்களுக்குப் பரப்பியவர் யார் யார்? அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் எத்தனை பேருக்குப் பரப்புவார்கள் என்பதும் தெரியாத நிலையில் இப்படித்தான் கரோனா பரவுகிறது ...
Read More »இறந்தவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசாங்கம்!
கொரோனா பாதிப்பு இருப்பதாக , Li Wenliang எங்களுக்கு முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது என சீன காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சீனாவை மட்டுமல்ல இன்று முழு உலகையும் நிலைகுலையச் செய்திருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்பில் முதல் முதலில் வெளிப்படுத்தியவர் தான் Li Wenliang என்கிற மருத்துவர். ஆனால், அவரின் பேச்சினை அரசும் கண்டு ...
Read More »ஆஸ்திரேலிய அகதிகள் அச்சத்தில்! முகாம் காவலாளிக்கு கொரோனா!
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டல் அகதிகளை வைத்திருக்கும் தற்காலிக இடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட அகதிகள், இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. உணவு மற்றும் பிற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் இடம் மிக குறுகியதாகவும் பொதுவானதாகவும் இருக்கும் சூழலில், அகதிகளுக்கு பாதுகாப்பற்ற ...
Read More »ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் 07 ஆவது மரணம்!
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், நியூ சவுத் வேல்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து, இம்மாநிலத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-யை தாண்டியுள்ளது.
Read More »