கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார்.
ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையை பாராட்டியுள்ளார்.
மேலும், மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்! கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.