மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது மகன் துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ‘ஃபேமிலி’ எனும் குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ...
Read More »குமரன்
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கிய ராகவா லாரன்ஸ்
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்கி இருப்பதாக கூறியுள்ளார். கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.
Read More »மாஸ்க்குகளை விட்டுக்கொடுங்கள்
யோகி பாபு நடிப்பில் உருவாகவிருக்கும் காக்டெய்ல் படத்தின் நாயகி ராஷ்மி கோபிநாத் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் ...
Read More »தடைகளும் உலகளாவிய தொற்றுநோயும்!
மேற்காசிய நாடான ஈரான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் கடுமையாக போராடிக்கொண்டிரும்கின்ற இந்த நேரத்தில் கூட, அதற்கு எதிரான தடைகளை தளர்த்துவதற்கு மறுத்த அமெரிக்காவின் செயல் மனிதாபிமான நெருக்கடிச் சூழ்நிலை முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதாக இருக்கிறது. மேற்காசியாவில் ஈரானிய இஸ்லாமிய குடியரசே வைரஸ் தொற்றுநோயினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்ட்டிருக்கும் நாடாகும். ஏற்கெனவே அங்கு 3,739 பேர் மரணமடைந்திருப்பதுடன் 62,589 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈரான் பல முனைகளில் தோற்றுவிட்டது என்பதே உண்மையாகும். வர்த்தக நிறுவனங்கள், மத நிறுவனங்கள் மற்றும் மக்கள் ...
Read More »காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்
தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவிற்கும், பிரதமர் ...
Read More »தாராபுர முடக்கத்திற்கான காரணம் என்ன?
இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய புத்தளம் பகுதியைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், ; மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தமை வெளிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டது. இந் நிலையில் குறித்த தொற்றாளர் தராபுரத்தில் மிக நெருக்கமாக பழகிய இரு குடும்பங்கள் விஷேட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தராபுரத்தின் இரு கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 500 பேர் வரையிலானோர் முடக்கப்பட்ட ஊருக்குள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ...
Read More »தாயின் வயிற்றிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்
— சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியமானது என தெரிவித்துள்ளனர். பிறந்த சில நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நான்கு புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததையடுத்தே சீன மருத்துவர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இவ் நான்கு குழந்தைகளில் மூன்று ...
Read More »வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது!
கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ள நடிகை மீனா, மக்கள் வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது என தெரிவித்துள்ளார். நடிகை மீனா கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் நிறைய பேர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக வெளியே சுற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதுபோன்று, அரசாங்கம் சொன்னதை கேட்காததால்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலைமை ...
Read More »ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்
ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியானது. இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையுமே தினசரித் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ...
Read More »இலங்கையில் 07ஆவது கொரனா நோயாளி உயிரிழந்துள்ளார்!
இலங்கையில் கொரனா வைரஸ் தொற்றுப் பாதித்த 7ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார். தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கல்கிசையைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் ஜேர்மனி நாட்டிலிருந்து வருகை தந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 139பேர் வைத்தியசாலைகளில் ...
Read More »