அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More »குமரன்
நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். ...
Read More »அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள்!
அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதி சிங்கள மக்களின் அரசியலுடன் ஒப்பிடுவது மூடத்தனம். ...
Read More »அவளுக்கு ஒரு வாக்கு ; நிராகரிக்கப்பட்டது ஏன்?
1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வலுப்பெற்று வரும் நிலையில் பெண்கள் உள்ளதையும் இழந்த கதையாகவே பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் புதிய பாராளுமன்றத்திற்கு எட்டு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட ...
Read More »செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதைக்கு ஹோப் விண்கலம் திருப்பி விடப்பட்டது
டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது. இது குறித்து முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டு வரும் ‘ஹோப்’ விண்கலம் 1,500 கிலோ எடை உள்ளது. இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விண்வெளியில் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இந்த விண்கலத்தால் தொடர்ந்து 2 ...
Read More »32 நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்
கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்ளுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஓய்வூதியம் பெற தகுதி பெற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டிய கட்டாயமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகள் மற்றும் தேசிய பட்டியலில் புதிய உறுப்பினர்களாக பலர் தெரிவாகிய நிலையில், அவர்கள் 4 வருடங்களும் 8 மாதங்களுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளனர். எனவே கடந்த நாடாளுமன்றத்தை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்திய ...
Read More »சுரேன்ராகவனின் தேசியப்பட்டியல் ஆசனம் கண்டனத்திற்குரியது!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியலுக்கு நியமித்தவரை புறக்கணித்துவிட்டு சுரேன்ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது அதில் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாசவின் பெயர் முதலாவது என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் எங்களுடைய பரிந்துரையை புறக்கணித்து துரதிஸ்டவசமாக பொதுஜனபெரமுன சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து எங்களிடம் கேட்டிருக்கவேண்டும் அல்லது அறிவித்திருக்கவேண்டும் அவர்கள் அதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள ...
Read More »விஷ்ணு விஷால் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ...
Read More »வடக்கின் ஆளுநராக மேஜர் ஜெனரல்……..!
வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார். இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழலில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக சிறிலங்கா ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.
Read More »யாழில் காவல் துறை மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் சிறிலங்கா காவல் துறை மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளளதுடன், சம்பவத்தில் 2 காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய்காவல் துறை இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அந்த நபரைத் தேடிய போது, பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த முரண்பாடு ...
Read More »