கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரானது இன்று மெல்போர்னில் ஆரம்பமாகியுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பான் வீராங்கனையான நவோமி ஒசாகா வென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னில் பட்டத்தை வென்ற ஒசாகா, ரோட் லாவர் அரங்கில் நடந்த போட்டியின் முதல் போட்டியில் விளையாடி, அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் மெல்போர்னில் நடந்த காலிறுதிக்கு முன்னேறிய தரவரிசையில் ...
Read More »குமரன்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இலக்கை அடைந்தது
அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது. வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின. தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர். இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதியில் நினைவுக் ...
Read More »பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான மாபெரும் பேரணியானது இன்று (07.02.2021)காலை கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பித்து பொலிகண்டி நோக்கி பயணம் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், வாகன ஊர்வலம் என எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும், இது நீதிமன்ற கட்டளை எனவும் அறிவித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பேரணி நடந்துகொண்டிருந்தது. இப்பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் சிறிது நேரம் நின்று ...
Read More »தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில், பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் அன்பறிவு. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் ...
Read More »எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம்!
கடந்த பத்து வருடங்களாக பிழையான திசைக்கு இந்த அரசியலை கொண்டுசென்ற தரப்புகள் கூட தவிர்க்க முடியாமல் இன்று சரியான பாதைக்கு – தமிழ்தேசத்தை அங்கீகரிக்கின்ற,ஒரு இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை கோருகின்ற,ஒரு பாதைக்கு வந்திருக்கின்றது,இந்த நிலைமை மேலும்பலப்பட எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம். ஏன தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான இந்த நடைபயண போராட்டம் காலை 8 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று ...
Read More »மியான்மார் தரும் பாடம்
மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது மூன்றாவது இராணுவச் சதியை அரங்கேற்றியது. மியான்மாருக்கு இராணுவச் சதியும் இராணுவ ஆட்சியும் புதிதல்ல. ஆனால், மாறிவரும் உலக ஒழுங்கில், கொவிட்-19 நோயின் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவாலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த இராணுவச் சதி முக்கியத்துவம் வாய்ந்தது. பர்மா என்று பொதுவில் அறியப்பட்ட மியான்மார், பிரித்தானியா கொலனி ...
Read More »அனைத்து தடுப்பு முகாம்களையும் மூடுங்கள்!
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் ஹோட்டல் வெளியே கூடிய அகதிகள் நல ஆர்வலர்கள் தடுப்பில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும், அனைத்து தடுப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற முழக்கங்களுடன் பேரணி நடத்தியிருக்கின்றனர். Campaign Against Racism and Fascism சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட Fanoush மற்றும் Imran என்ற அகதிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில வாரங்களில் சுமார் 50 அகதிகள் ...
Read More »இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை சிறிலங்கா திருப்பி கொடுத்தது பின்னணியில் சீனா?
இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் சிறிலங்காவுக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் டிசில்வா கூறியுள்ளார். சிறிலங்காவின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையத்தை மேம்படுத்த சிறிலங்காவுடன் இந்தியாவும் – ஜப்பானும் முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை சமீபத்தில் சிறிலங்கா அரசு தன்னிச்சையாக ரத்து செய்தது. தொழிற்பூங்காக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இப்பணி சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் கீழ் ...
Read More »யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறித்த கண்டு பிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமனாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வையிட்டதுடன் குறித்த தொழில்நுட்ப ...
Read More »சுதந்திரம் கிடைத்ததா? எல்கே தளங்கள் மீது சைபர் தாக்குதல்!
எல் கே (lk) டைாமைனின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல இணையதளங்கள் மீது இன்று (6) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது என இலங்கை கணனி அவசர ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் எல்கே டொமைன் தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தளங்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என்ற கூற்றுடன் அடங்கிய தகவல் ஊடுருவப்பட்ட தளங்களில் பதிவாகியுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தல், ...
Read More »