அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்தார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார். இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை ...
Read More »குமரன்
யுவனுடன் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமான் மகன்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபிகளை புகழும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். ‘தலா அல் பத்ரு அலாய்னா’ எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ...
Read More »குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது சாத்தியமா?
உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுக் குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவது சாத்தியமற்ற நிலையிலேயே உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தற்போதைய நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் கணிப்பின் படி, 2022ம் ஆண்டு இடைப்பகுதியிலிருந்தே தற்காலிக குடியேறிகளும் நிரந்தர குடியேறிகளும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களைப் பொறுத்தமட்டில் இந்தாண்டின் பிற்பகுதியிலிருந்து சிறு சிறு கட்டங்களாக மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு உள்ளது. அத்துடன், ஆஸ்திரேலிய அரசு சமர்பித்துள்ள 2021-22 நிதிநிலை அறிக்கையில் ஜனவரி 2022 ...
Read More »கரோனா பற்றி உங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது?
“அம்மா, உலகம் அழியப்போவுதாமா? நாமெல்லாம் சாகப்போறோமா?” – நடு இரவில் எழுந்து கேட்கும் ஆறு வயதுக் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவளை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது, தூங்கு” எனத் தட்டிக்கொடுத்த அந்தத் தாய், அன்று மாலைதான் தனது கணவரை கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் தூக்கம் வராமல் பரிதவித்துக்கொண்டிருந்தார். கடந்த வாரத்தில் பார்த்த ஒன்பது வயதுச் சிறுவனொருவன் எப்போதும், “பயமாயிருக்கு… பயமாயிருக்கு” எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவன் முகம் பயத்தால் வெளிறிப்போய் இருந்தது. இவர்களைப் போல இன்னும் ...
Read More »சீன நகரத்தில் பிறந்தநாள் விழாக்களுக்கு தடை
சீனாவில் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை பன்னிங் நகரம் எடுத்துள்ளது. சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை பன்னிங் நகரம் எடுத்துள்ளது. மேலும் திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கும் இந்த நகரம் ...
Read More »கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் ...
Read More »யாழில் 58 பேர் உட்பட வடக்கில் மேலும் 74 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 853 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை சேதப்படுத்திய சிங்களப் பேரினவாத அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை சேதப்படுத்திய சிங்களப் பேரினவாத அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்என என மே17 இயக்கம் தெரிவித்துள்ளது மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது ஆங்கிலேய காலனியாதிக்க விடுதலைக்கு பிறகான ஒன்றிணைந்த இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதன் விளைவாக எழுச்சிபெற்ற தமிழீழ விடுதலை போராட்டத்தை நசுக்க, தனது புவிசார் நலனுக்காக இலங்கை, இந்தியாவுடன் இணைந்த வல்லாதிக்க நாடுகள் 2009 மே மாதம் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அரங்கேற்றியது. தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெற்ற காவல் துறை
முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது மக்கள் கூடக் கூடாது பொது இடத்தில் வைத்து எந்த நினைவுகூரக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் காவல் துறை தடை உத்தரவு பெற்றுள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க் காலில் நினைவேந்தலில் ஈடுபட ஐந்து பேருக்கு எதிராகவும் காவல் துறை தடை உத்தரவு பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ளது. இந்நிகழ்வை தமிழ் மக்கள் நினைவேந்துவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு காவல் துறை நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தடை ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவுமுற்றத்தில் காணப்பட்ட நினைவுத்தூபி அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. நடுகல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட நினைவுக்கல்லும் காணாமல் போயுள்ளது
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			