கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal