சீனாவில் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை பன்னிங் நகரம் எடுத்துள்ளது.
சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை பன்னிங் நகரம் எடுத்துள்ளது. மேலும் திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளுக்கும் இந்த நகரம் புதிய விதிகளை வகுத்து இருக்கிறது. இதில் 200 யுவானுக்கு (சுமார் ரூ.2,400) அதிகமான பணப்பரிசுகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் அனைத்தும் அங்கு சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கிராம அமைப்பு தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பொதுமக்களுக்கு அல்ல.
சீன விருந்துகளில், மங்கல விழாக்களில் ரொக்கப்பரிசுகளை வழங்குவது பாரம்பரிய வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் செல்வாக்கு மிக்கவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகிறபோது திரளானோர் பங்கேற்று லஞ்சத்தை பணப்பரிசாக அளிப்பதாக புகார் எழுவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal