“கொரோனா வைரசால் நாங்கள் எளிதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய, மரணம் கூட ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது,” என ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தங்களை சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் முன்வைத்துள்ளனர். குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள தாங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமற்றது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசின் அறிவுரையிலேயே, தடுப்பில் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று ...
Read More »குமரன்
அப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்களும், தனிநபர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தி என்று தலைப்பிட்டு ...
Read More »ஒரே வழிதான் இருக்கு – ராகவா லாரன்ஸ்
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் இயக்குனர் லாரன்ஸ் ...
Read More »கொரோனா பீதியால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்
கொரோனா பீதியால், துபாயில் ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணத்தை ரத்து செய்து விட்டு, பிரபல நடிகர் ஒருவர் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் செய்ய உள்ளாராம். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவர் தெலுங்கில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படம், அதே பெயரில் ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நிதின் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ராம்கோபால் வர்மா இயக்கிய ‘அக்யுத்’ இந்தி படத்திலும் நடித்துள்ளார். சில படங்களை ...
Read More »கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு ...
Read More »கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய சச்சின்
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாயை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண ...
Read More »சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்
நடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார். தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் சேது ராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். நடிகரும் சேதுராமனின் ...
Read More »அரசாங்கம் + கொரோனா = மக்கள்
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும் மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ...
Read More »கொரோனா குறித்து அறிய புதிய இணையதளம்
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றிய ...
Read More »இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை!
இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாக பொதுமன்னிப்பில் விடிவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுபேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த குற்றவாளிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ;பொதுமன்னிப்பளித்து விடுதலை ...
Read More »