அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடொன்றினை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இது குறித்து இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது விஷேட வைத்திய நிபுணர் சுதத் ...
Read More »குமரன்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் வழி – சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி. இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்! இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அதனால்தான் இந்த ஒற்றை எதிரிக்கு எதிராக உலகளாவிய போர் தொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் எதற்கும் அஞ்சாமல், தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள், பல நாடுகளிலும் இந்த எதிரி வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் உலகுக்கே புரியாத புதிராக இருக்கிறது. ...
Read More »கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி?
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது எப்படி? என்று பா.ஜனதா எம்.பி.யின் மகள் காணொளி மூலம் விளக்கம் அளித்துள்ளார். தாவணகெரே நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் சித்தேஷ்வர். இவரது மகள் அஷ்வினி. இவர் தனது மகள் மற்றும் கணவருடன் கயானா நாட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம்(மார்ச்) இவர் கயானா நாட்டில் இருந்து தனது மகளுடன் இந்தியா திரும்பினார். அதையடுத்து அவருக்கும், அவருடைய மகளுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அஷ்வினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ...
Read More »ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்
அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு பற்றி கேள்விப்பட்டதும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகள் மற்றும் ...
Read More »மதுப்பழக்கத்தை மறக்கடிக்க உதவுமா ஊரடங்கு?
இந்த ஊரடங்கு காலத்தில் மதுப்பழக்கத்தில் சிக்கியோரை மீட்டெடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மதுபிரியர்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். இந்தநிலையில் மது குடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில் வார்னிஷ் மற்றும் ஷேவிங் லோஷன் போன்றவற்றில் குளிர்பானம் கலந்து குடித்து தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் பட்டாபிராமில் மது பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் ஒருவர் மதுபாட்டில் ...
Read More »ட்விட்டர் பயனர் தரவுகள் சேமிப்பு: மோஸில்லாவைக் குற்றம் சாட்டும் ட்விட்டர்
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல் பற்றிய தரவுகளைச் சேமித்து வைத்ததாக மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை ட்விட்டர் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது பொதுப் பயன்பாட்டில் இருக்கும் கணினினியில், மோஸில்லா ப்ரவுசரில் நீங்கள் ட்விட்டர் பயன்படுத்தியிருந்தால், அதில் டைரக்ட் மெஸேஜ் மூலமாக உரையாடியிருந்தாலோ அல்லது உங்கள் ட்விட்டர் பக்கத் தரவுகளை மொத்தமாகப் பதிவிறக்கம் செய்திருந்தாலோ, நீங்க லாக் அவுட் செய்த பின்பும் அந்தத் தகவல் ப்ரவுசரின் கேச்சில் (cache) பதிவாகியிருக்கும். பொதுவாக மோஸில்லா ப்ரவுசரில் கேச்சில் இருக்கும் தகவல்கள் 7 நாட்களுக்குப் பின் தானாக அழிந்துவிடும். இந்தப் பிரச்சினையை சஃபாரி, ...
Read More »இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ இந்தக் கொரனோ?
கொரனோ வைரஸினால் உலகம் முழுதும் பலியானோர் எண்ணிக்கை 95,000த்தைக் கடந்து விட்ட நிலையில் நாடுகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளன, மக்கள் அரசாங்கங்கள், மருத்துவ நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர், இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார். “ஒற்றுமை மற்றும் உறுதி மட்டுமே இந்த கவலையான நாட்களில் முக்கியமானது” என்று வலியுறுத்தும் கட்டெரெஸ், ஐநாவின் நிதிநிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும், அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே போதிய ரொக்கம் ...
Read More »தனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் – திரிஷா
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்வதை அவமானமாக எண்ண வேண்டாம் என திரிஷா அறிவுரை கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிர்ப்பலிகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் இருந்த பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்துள்ளனர். டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த மாநாட்டில் ...
Read More »1 லட்சம் பேருக்கு உணவு – ஹிருத்திக் ரோஷன் உதவிக்கரம்
பிரபல தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன. தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் தங்கள் வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு, தேடி சென்று உணவு வழங்குகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ...
Read More »கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் யோசனை
இந்தியாவில் கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் என நடிகை காஜல் அகர்வால் யோசனை கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ...
Read More »