இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ இந்தக் கொரனோ?

கொரனோ வைரஸினால் உலகம் முழுதும் பலியானோர் எண்ணிக்கை 95,000த்தைக் கடந்து விட்ட நிலையில் நாடுகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளன, மக்கள் அரசாங்கங்கள், மருத்துவ நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்,

இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஒற்றுமை மற்றும் உறுதி மட்டுமே இந்த கவலையான நாட்களில் முக்கியமானது” என்று வலியுறுத்தும் கட்டெரெஸ், ஐநாவின் நிதிநிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும், அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே போதிய ரொக்கம் கைவசம் தங்களிடம் இருப்பதாகவும் பங்களிப்பு செய்யும் நாட்டின் ராணுவம் மற்றும் காவல் துறைக்கு அளிக்க தங்களிடம் திறன் இல்லை எனவும் எச்சரித்துள்ளார்.