மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »குமரன்
கருணா ஒரு ‘காமடி பீஸ்’ – வியாழேந்திரன்
மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்தார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்; அவரது பிறந்த நாளான இத் தினத்தில் அவர் தலைமையில் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது இதில் கலந்து கொண்ட பின் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு இலச்சம் வேலை ...
Read More »கமலாவோ விமலாவோ யார் வந்தாலும் ஒரு கட்டமைப்பு வேண்டுமே?
கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவில் இருந்து பெயர்த்து எடுத்து மானிப்பாய் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். வேறு சிலர் கமலா ஹாரிஸின் அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் வேரைக் கொண்ட பெண்ணாகிய ரோகிணி லக்ஷ்மி கொஸோக்லு குறித்தும் பெருமைப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு கமலாவுக்கும் ரோகிணிக்கும் சொந்தம் கொண்டாடி கமலாவின் வருகையால் தமது அரசியல் வாழ்வில் ...
Read More »கொழும்பு மாவட்டமே ஆபத்தானதாக காணப்படுகின்றது
மேல்மாகாணத்தில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகின்றது குறிப்பாக கொழும்பு மாநாகரசபை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆபத்து நிலவுகின்றது என தொற்றுநோயியல் வைத்தியர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையும் புறநகர்பகுதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன கொழும்பிலும் கம்பஹாவிலும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஒப்பீட்டளவில் மேல்மாகாணமே மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது
Read More »நல்லுரில் ஒருவருக்கு இன்று கொரோனா
யாழ்ப்பாணத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 157 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றதன் காரணமாக ...
Read More »ஜோ பைடனை இலங்கை எப்படிச் சமாளிக்கும்?
அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ...
Read More »சூர்யா அழுதபோது நானும் அழுதேன்…
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வடிவேலு தனது ...
Read More »எனது குளியல் அறையில் கமரா வைத்தனர்!
சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டனர் என மரியம் குடும்பம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ரூ.70 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மரியம் பேரில் பரிமாற்றம் செய்யப்பட்டன என புகார் எழுந்தது. இந்த வழக்கிற்காக ...
Read More »ஆஸி. சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் கோரன்டைனில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்றள்ள இந்திய அணி ...
Read More »மைக்கேல் ஜாக்சனாக மாறிய தனுஷ்
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ரகிட ரகிட பாடல் பட்டி தொட்டியெங்கும் சூப்பர்ஹிட் ஆனது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் புஜ்ஜி என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அனிருத் இப்பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இப்பாடல் காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள ...
Read More »