தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற அடையாளத்தை வலியுறுத்தியவர் பெரியார். இன்று அவரே தாய்மொழியின் அடிப்படையில் தமிழரா என்ற கேள்விக்கு ஆளாகி நிற்கிறார். அந்தக் கேள்விக்குப் பதிலாக, பெரியார் தமிழ், தமிழர் உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களும் ஆற்றிய பணிகளும் நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், பத்திரிகையாளர் ப.திருமாவேலன் ஏறக்குறைய 1,600 பக்க அளவில் எழுதி, நற்றிணை பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் ‘இவர் தமிழர் இல்லை என்றால் வேறு எவர் தமிழர்?’ என்ற தலைப்பிலான புத்தகம் ...
Read More »குமரன்
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | ஓர் அகதி முகாமின் பின்கதவு புன்னகைகள்!
“உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.” மெல்போர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் வந்திருந்த நீதனைப் பற்றி மாத்திரமன்றி, சகல அகதிகளினதும் தலையில் புள்ளிவைத்து சித்திரம் வரைந்து, அவர்களின் பூர்வீகம், நட்சத்திரம் முதற்கொண்டு அனைத்தையும் தகவல்களாகச் சேகரித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை. வெவ்வேறு முகாம்களில் வந்திருந்தவர்களின் படங்களைக் காண்பித்து, `இவரைத் தெரியுமா?’ – என்ற கணக்கில் ஏராளம் கேள்விகளைக் கொட்டி விசாரணைகளை ஆரம்பித்தார்கள். போரிலிருந்து ...
Read More »மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதியரசர்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார் அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமணம் செய்து கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன, ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டுத்துறைக்குப் பிரவேசித்தவராவார். விக்கும் அதுல களுஆரச்சி அவர்களின் 33 வருடகால சேவையில் 27 வருடங்களாக ...
Read More »ஆளுமையுடைய அமைச்சரவை வேண்டும் – விதுர விக்கிரம நாயக்க
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்மையான, புத்திசாலித்தனமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆளுமையுடைய அமைச்சரவையை நியமிப்பதே ஒரே வழியாகும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதலில் தலைவர்களுக்கு தவறான ஆலோசனைகளை கொடுக்கும் நேர்மையற்ற ஆலோசகர்கள் அகற்றப்பட வேண்டும். தற்போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் பொதுமக்கள் எரிபொருள் விலை உயர்வால் மேலும் தாங்க முடியாத சுமைக்கு ஆளாகி உள்ளனர் என்றார். ...
Read More »பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்
சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபனுக்கு தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா ...
Read More »ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது -40 பயணிகள் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் படகு விபத்தில் சிக்கிய சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக தெரிகிறது. பின்னர் படகின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். பலர் உயிர்பிழைப்பதற்காக தண்ணீரில் குதித்து நீந்தி கரையேறி உள்ளனர். விபத்து பற்றி தகவல் அறிந்த ...
Read More »ஆஸ்திரேலியா அறிவித்துள்ள புதிய திட்டமூடாக அகதிகளை குடியமர்த்துவது எப்படி?
ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது.
Read More »மாவீரர் நாள் கொண்டாடியதால் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நபர்
சிங்கப்பூரில் மாவீரர் நாள் கொண்டாடியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் எடையூர் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குமரேசன் (வயது 25). இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை ...
Read More »யாரும் நம்ப வேண்டாம்… அபர்ணா பாலமுரளி கோபம்
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வந்தார். 8 தோட்டாக்கள் படத்திலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் நடிகர்- ...
Read More »பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் பயங்கர வெடிவிபத்து- 2 பேர் பலி
வெடிவிபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read More »