திருமணத்தின் போது தனது பாட்டியின் கிழிந்த புடவையை அணிந்து கொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வருகின்றன. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்தனர். லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை 2012-ல் பதிவு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த ...
Read More »குமரன்
இங்கிலாந்தில் மர்மநபர்களின் கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் பலி!
இங்கிலாந்தில் விருந்துபசாரமொன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட கத்திக்குத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் 17 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இளைஞர்கள் மீது ...
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி!
எஸ்பிஎஸ் நியுஸ் தமிழில்- ரஜீபன் அவர் வழமைக்குமாறான பயணிகள் கனமான முதுகுப்பொதிகளுடன் அங்குமிங்கும் நடமாடித்திரிவதை பார்த்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பின் சங்கிரிலா ஹோட்டலின் டேபிள் ஒன் விடுதிக்குஅருகில் அவர்கள் அவரை தள்ளிவிட்டு சென்றனர். நான் அவர்கள் பயங்கரவாதிகள் என ஒருபோதும் நினைவிக்கவில்லை அவர்கள் முரட்டுத்தனமானவர்களாக காணப்பட்டனர் என தெரிவிக்கின்றார் ஹனேகே மனோகரன் பின்னர் வெளியான சிசிடிவி காட்சிகள் ஹனேகே மனோகரனிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரியொருவர் காணப்படுவதை காண்பித்துள்ளன. பெருமளவானவர்கள் காணப்பட்ட உணவகத்தை அவர்கள் உன்னிப்பாக நோக்கினார்கள் அங்கு அனேகமாக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே ...
Read More »இசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா!
காற்றின்மொழி, லட்சுமி உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடிய ஸ்வாகதா, தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். காற்றின்மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருப்பவர் பாடகி ஸ்வாகதா. இவர் தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார். ஸ்வாகதா இசையமைத்து, நடித்த ...
Read More »சிலியில் போராட்டம்: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
மத்திய அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் கட்டணத்தை 800 முதல் 830 சிலி பெசோக்கள் வரை அரசாங்கம் உயர்த்தியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கடந்த வெள்ளிக்கிழமை சாண்டியாகோ மற்றும் பிற நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க சாண்டியாகோ மற்றும் சாகபுகோ மாகாணங்களிலும், புவென்ட் ...
Read More »டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபல குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு ...
Read More »ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீராவியடி ஆலயத்திற்கு அருகில் தேரர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்பிலேயே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரையும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாது!
கோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி வயற் காடுகளுக்குள் மறைந்து வாழுகின்ற ஒரு சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். ஜனநாயகத்தையும் அமைதியையும் விரும்பும் பெரும்பாலான மக்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்கள். ...
Read More »கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்!
ஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன. போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர். அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் ...
Read More »ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்!
போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இராணுவ ...
Read More »