நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கூறியுள்ளார். இதேபோன்றே பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ...
Read More »குமரன்
பிளாஸ்டிக் கழிவுகளால் மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழப்பு!
இரண்டு தொலைத்தூர தீவுகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் மாசுப்பாட்டில் சிக்கி மில்லியனுக்கும் அதிகமான ஹெர்மிட் நண்டுகள் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகேஸ் தீவுகளில் சுமார் 508,000 ஹெர்மிட் நண்டுகளும், பசுபிக் பெருங்கடலில் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 ஹெர்மிட் நண்டுகளும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் கோகோஸ் தீவில் பிளாஸ்டிக் பொத்தல்கள், பாதணிகள் உள்ளிட்ட 414 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியருப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை ...
Read More »இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளமான 36 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. ...
Read More »லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய தலைவர்!
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக டாக்டர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இவருக்கான நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார். டாக்டர் சரித ஹேரத் மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரும், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பிரதித் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறைத் தலைவரும், ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஆவார்.
Read More »நான் அப்படி செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை! – மீனா
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் அப்படி செய்தது என் மகளுக்கு பிடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார். 1990களில் கலக்கிய மீனா திருமணத்துக்கு பின்னர் தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்தார். விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் கரோலின் காமாட்சி என்ற இணைய தொடரில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். சிபிஐ ஆபிசராக நடித்துள்ள மீனா அளித்த பேட்டி: கரோலின் காமாட்சி தோற்றம் வித்தியாசமாக இருக்கிறதே? சினிமாவில் பிசியாக இருக்கும்போது டிவி பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் துணிந்து ...
Read More »இலங்கை தமிழர் விவகாரம் ; இந்திய ஆங்கில தேசிய பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களில்..!
இலங்கையின் வடக்கு–கிழக்கு பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கொண்டிருக்கும் மனப்பாங்கு இந்தியாவினால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்கின்ற அதேவேளை அதிகார பரவலாக்கத்திற்கு மேலாக பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அவரது விருப்பம் புதுடில்லிக்கும் சென்னைக்கும் கவலை தருவதாக இருக்கும். மேலும் தமிழர் பிரச்சினை இருதரப்பு உறவுகளை மீண்டும் பாதிக்கக்கூடிய “ஒரு வெடிகுண்டாக” தொடர்ந்திருக்கும் தமிழர் பிரச்சினையிலும் ஏனைய விவகாரங்களிலும் இரு நாடுகளும் பொதுவான நிலைப்பாட்டை கண்டறிய வேண்டியிருக்கும் என்றும் இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசிய பத்திரிகைகள் அவற்றின் ஆசிரிய தலையங்கங்களில் குறிப்பிட்டுள்ளன. ...
Read More »ஈரானில் கடந்த வாரம் 2 இலட்சம் மக்கள் போராட்டம்!
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கடந்த வாரம் ஈரானில் 200,000 மக்கள் போராட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னணி சர்வதேச இணையத்தளமான ‘த கார்டியன்’ செய்தித் தளம் தெரிவித்துள்ளது. ஈரான் அரசாங்கம் எரிபொருள் விலையை மூன்று மடங்காக உயர்த்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. இதனால் இஸ்லாமிய குடியரசின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வன்னம் கலவரங்களும், போராட்டங்களும் ஈரானில் இடம்பெற்று வருகின்றன. ஈரானிய அதிகாரிகள் இந்த வாரம் 200,000 மக்கள் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டதாக மதிப்பிட்டுள்ளதுடன், 7,000 க்கும் மேற்பட்ட கைது சம்பவங்களும் ...
Read More »இரு அரசுகள் குறித்த பிரித்தானிய கட்சியின் கருத்து! -சிறிலங்கா அரசாங்கம்
இலங்கையில் இரு தேசம் ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் கருத்து தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அதன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தலை கொண்ட அவர்களின் காய்நகர்த்தல்களின் இலங்கை தலையிட தயாரில்லை எனவும் வெளிவிவகார செயலாளர் அறிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க இது குறித்து தெளிவுபடுத்துகையில் இலங்கையில் இரண்டு இராச்சியம் என்ற கருத்துக்கள் இங்கிலாந்து கட்சிகள் முன்வைக்கும் காரணியில் நாம் அறிந்த ...
Read More »கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்!
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி என்ற அடிப்படையில்கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள விடுபாட்டுரிமையை வலியுறுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ...
Read More »ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் இந்தியா மட்டுமே வீழ்த்த முடியும்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் பாகிஸ்தான் அங்கு 0-2 என்று ஒயிட்வாஷ் டெஸ்ட் தோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான மைக்கேல் வான் இந்தியா மட்டுமே ஆஸி.யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக விராட் கோலி தலைமை இந்திய அணிக்கே இத்தகைய திறமைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானை அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இன்னின்ங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் தங்கள் வெற்றி வாகையை 6-0 என்று உயர்த்தியுள்ளனர். ...
Read More »