சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பினால் இன்று கைவிடப்பட்டது. மாதகல் கிழக்கு ஜே /150 கிராம அலுவலர் பிரிவில் மூன்று பரப்புக் காணியை சுவீகரிக்க வந்த நில அளவை திணைக்களத்தினரை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது “நமது இந்த காணிகளில் கடல் அரிப்பு ஏற்பட்ட போது இந்த காணியை பாதுகாக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எங்களுடைய வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் ...
Read More »குமரன்
ஆஸ்ரேலியா பிரிஷ்பனில் இடம்பெற்ற மாவீரர் நாள்
தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடரினை லெப்ரினன்ற் பொற்தேவன் அவர்களின் சகோதரன் திரு. டெனிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடி ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. லெபோன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்த திரு. ரவி அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரை லெப்ரினன்ற் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி திருமதி. பானுமதி அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ...
Read More »பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த ...
Read More »புனிதர்கள் திருநாளில் ஒரே நாடு ஒரே சட்டம் சிதறுண்டு சிதைகிறது!
இலங்கை என்பது தமிழர் தேசம், சிங்களவர் தேசம் என இரண்டாகியுள்ளது என்பதை நாடாளுமன்றம் இந்த மாதம் நேரில் தரிசித்தது. ஒரே நாடு – ஒரே சட்டம் என்பது நடைமுறைக்கு உதவாது என்பதை மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தீர்ப்புகள் ஊடாக நீதிமன்றங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது என்ன நாடோ? என்ன சட்டமோ? வன்னியின் அடர்ந்த காட்டுப்பகுதியில், இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை சூழ்ந்து நிற்கையில், 1989 நவம்பர் 27ம் நாளன்று மாவீரர் நாள் பிரகடனமானது. 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் உறைநிலை கண்டதாயினும், தமிழரின் நீண்டகால அபிலாசைகளுக்கான அரசியல் ...
Read More »முள்ளிவாய்க்காலில் ஊடவியலாளர் மீது இராணுவம் தாக்குதல்
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
Read More »முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் உள்ளிட்டோர் மாவீரன் லெப்.சங்கர் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
Read More »மாவீரர் நாள் 2021
மாவீரர் நாள் 2021
Read More »ஆஸ்திரேலியா: Orphan Relative விசா: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கென பல விசா பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று Orphan Relative விசா(subclass 117) ஆகும். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள் என்பதைப் பார்ப்போம். ஏனைய ஆஸ்திரேலியா விசா பிரிவுகளைப் போலவே Orphan Relative விசாவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்பவர்கள் மாத்திரமே இவ்விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெறுவர். இதன்படி வெளிநாடு ஒன்றில் பிறந்த குழந்தையொன்றின் பெற்றோர் இறந்துவிட்டால், அல்லது காணாமல்போய்விட்டால் அல்லது பெற்றோரால் அந்தக் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டால், அந்தக் குழந்தை ...
Read More »ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை
ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இது பற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி கூறுகையில், “இயற்கையாகவே நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது. ...
Read More »விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ...
Read More »