தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- ஐந்து நாட்களாக கிட்டதட்ட ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் ...
Read More »குமரன்
குருந்தூர் மலையில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிப்பு
தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடம்பெற்று வரும் முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வின் போது சிவலிங்கத்தை ஒத்த இடிபாடு ஒன்று வெளிப்பட்டுள்ளது. ஆதி ஐயனார் ஆலயம் இருந்த பகுதியில் அண்மையில் புத்தர் சிலை வைத்து தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியல் அகழ்வாராச்சி ஆரம்பட்டது.
Read More »வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா!
வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 776 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை ...
Read More »சூர்யா – ஜோதிகாவுக்காக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் பிரபல பெண் இயக்குனர்
நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகவும், பிரபல பெண் இயக்குனர் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம். நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் ஜோதிகா நடிக்கும் படங்களை தயாரித்துள்ள சூர்யா, அவருடன் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிப்பதற்கான ...
Read More »ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள்
ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார் அங்கிதா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆடுகிறார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து ...
Read More »கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்
நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
Read More »தமிழர் போராட்டங்களின் இலக்கு என்ன ?
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் – என்னும் சுலோகத்தின் கீழ் இடம்பெறும் எதிர்ப்பு பேரணி, தமிழ்ச் சூழலில் கவனத்தை பெற்றிருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்தான், வடக்கு கிழக்கில் இவ்வாறானதொரு எதிர்ப்பு பேரணி திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வு தொடர்பில் அனைவரது பார்வையும் திரும்பியிருக்கின்ற நிலையிலும்தான், இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. நிகழ்வை திட்டமிட்டவர்கள் தருணம் பார்த்து நிகழ்வை ...
Read More »கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ’.lk’ பதிவு
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ‘டொட் எல்.கே’ டொமைனை பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை முதல் .LK இணைய முகவரிகள் பல செயலிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு உள்ளான சில இணையதளங்களின் முகவரிகளை, வேறு இணையதளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் தரவுகள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
Read More »சிறிலங்கா ஜனாதிபதி மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார்
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் அடங்கிய குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரட்ண உட்பட பலரின் சிவில் உரிமையை அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தி பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ...
Read More »