நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal