குமரன்

கேப்பாபுலவு இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது!

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை பேணினார். புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்தார் என்ற குற்ற சாட்டின் பேரில் முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் தனது காணியை பறிகொடுத்து சொந்த நிலத்தை மீட்பதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களில் ; பங்கெடுத்தவரும் காணாமல் ஆக்கபட்டவரின் சகோதரனுமான நவரத்தினம் டிலக்சன்(வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (29) குறித்த இளைஞரின் வீட்டுக்கு வேன் ;ஒன்றில் வந்த பயங்கரவாத ...

Read More »

சரணடைந்தவர்கள் குறித்து அரசே பதிலளிக்க வேண்டும்

விடுதலைப் புலிகளின் போராளிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என சவேந்திரசில்வா தெரிவிப்பாராயின் இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; போர்க்காலத்திலும், போரின் இறுதியிலும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டோர் விடயத்தில் இறந்துவிட்டார்கள் என்ற பதிலுக்குப் பதிலாக இலங்கை ...

Read More »

உலக சுகாதார நிறுவன குழு, சீனா செல்கிறது

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. ஆனால் வுகானில் கொரோனா வைரஸ் தோன்றியதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு இடையே, ...

Read More »

மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்

தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் என்றும் கூறுகின்றார். வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு ...

Read More »

பெண்குயின் விமர்னம்

நடிகர் லிங்கா நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு கார்த்திக் பழனி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து செய்துவிட்டு, கவுதமை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம். இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, காணாமல் போன குழந்தை அஜய் கிடைத்துவிடுகிறேன். ஆனால், ...

Read More »

விடுதலைப் புலிகள் மீள உருவாக்கம் ….. கிளிநொச்சியில் இளைஞர்கள் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கடந்த மாதம் கிளிநொச்சியில் 22 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என வடக்கிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையோடு மாதம் முழுமையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர் என ...

Read More »

கைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முகக்கவசங்கள் நமது வாழ்க்கையின் ஒரு பிரதான அங்கமாக மாறிவிட்டன. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை(Smart face mask) வடிவமைத்துள்ளது. இம் முகக்கவசத்தை ப்புளூடூத்( Bluetooth) தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைபேசியுடன் இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பேசும் வார்த்தைகள் தொலைபேசியில் டைப் செய்யப்படவதோடு குரல் கட்டுப்பாட்டின்(voice control) மூலம் அழைப்புக்களையும் மேற்கொள்ள முடியும். அத்துடன் இம் முகக்கவசமானது அணிந்தவரின் ஒலி அளவை அதிகரிக்கவும் ...

Read More »

எலி தின்ற நிலையில் 4 வயது சிறுமியின் அழுகிய சடலம்

அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அழுகிய நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்ற நிலையில் அழுகிய கோலத்தில் சிறுமியின் சடலம் மீட்கபட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43) ஆகிய இருவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி ...

Read More »

கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படும் என்பதுடன் அனைவரும் அணுகும் வகையில் புதிய கல்வி முறைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோவின் அறிக்கை: பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் போதிய சமூக விலகலை அனைத்து நாடுகளும் முழுமையாகபின்பற்ற இயலாது. இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கற்றலில் கணிசமான பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ...

Read More »

தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை!

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்திரிபாலசிறிசேனவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதி காவல் துறைமா அதிபர்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து மாதத்திற்கு ஒருமுறை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மதிப்பீட்டு கூட்டமொன்றை நடத்துவது வழமை என அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீட்டு அறிக்கையொன்றை ...

Read More »