கைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முகக்கவசங்கள் நமது வாழ்க்கையின் ஒரு பிரதான அங்கமாக மாறிவிட்டன.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை(Smart face mask) வடிவமைத்துள்ளது.

இம் முகக்கவசத்தை ப்புளூடூத்( Bluetooth) தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைபேசியுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

இதன் மூலம் நாம் பேசும் வார்த்தைகள் தொலைபேசியில் டைப் செய்யப்படவதோடு குரல் கட்டுப்பாட்டின்(voice control) மூலம் அழைப்புக்களையும் மேற்கொள்ள முடியும்.

அத்துடன் இம் முகக்கவசமானது அணிந்தவரின் ஒலி அளவை அதிகரிக்கவும் ஜப்பானிய மொழியிலிருந்து 8 மொழிகளுக்கு மொழிபெயர்க்கக் கூடியவகையிலும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முகக்கவசம் அணிந்து கொண்டு தொடர்பு கொள்வதற்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.