குமரன்

தீவிர பரத நாட்டிய பயிற்சியில் கங்கனா!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தீவிரமாக பரத நாட்டியம் பயிற்சி பெற்று வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் முன்னரே அறிவித்தபடி தலைவி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்க ...

Read More »

எனக்கு எப்போது விடுதலை?

அகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள் மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக அவுஸ்ரேலியாவில் வழங்கப்படும் இலக்கியதற்கான விக்டோரியா பரிசை வென்றிருக்கிறார். இவ்விருதை ஏற்றுக்கொண்டு மனுஸ்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய அவர், இலக்கியத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அலைப்பேசியில் ...

Read More »

கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர்! -மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.   சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Read More »

கேரளாவில் மழை – நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்!

கேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. கேரளாவில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது மிக தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கேரள மாநிலமே மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த சில நாட்களாக இடை விடாது மழை கொட்டித் தீர்ப்பதால் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் நிலச்சரிவு ...

Read More »

சஜித்தின் பெயரே முன்மொழியப்பட்டது!

கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்கின்றார்கள். அத்துடன் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப (அமைச்சரவை அந்தஸ்து அற்ற) அமைச்சரான அஜித் பீ பெரேரா தெரிவித்தார். இதனைவிடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிலும் ...

Read More »

மொ​ட்டின் வேட்பாளருக்கு மைத்திரி ஆதரவு?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ​தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பொதுஜன ​பெரமுனவின்  கட்சி மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.

Read More »

நானும் துப்பாக்கி தூக்குவேன்! – காஸ்மீரிலிருந்து ஒரு குரல்

கீதா பாண்டே – பிபிசி தமிழில் ரஜீபன் ஸ்ரீநகரில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில்  முக்கியமானது கன்யார். இந்த பகுதிக்கு ஊரடங்கு நேரத்தில் செல்வதற்கு நாங்கள் பல வீதிதடைகளை கடந்து செல்லவேண்டியிருந்தது. நாங்கள் மற்றுமொரு வீதிதடையை எதிர்கொண்டவேளை நான் கீழே இறங்கி படமெடுக்க ஆரம்பித்தேன். அவ்வேளை ஒழுங்கை போன்ற பகுதியிலிருந்து வெளியே வந்த சிலர் முற்றுகைக்குள் வாழ்வது போன்று உணர்வதாக என்னிடம் முறைப்பாடு செய்தனர். இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் அடாவடித்தனமானது என அவர்கள் மத்தியில் காணப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்தார். ...

Read More »

பல் துலக்க குளியல் அறைக்கு சென்ற குழந்தைகள்… அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு!

அவுஸ்திரேலியாவில் 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு உறங்க செல்வதற்கு முன் இரண்டு குழந்தைகள் பல் துலக்குவதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். பல் துலக்கிக்கொண்டே எதார்த்தமாக மேலே நிமிர்ந்து பார்த்துள்ளனர். அப்போது 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று மேற்கூரையில் இருந்து தொங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்ததும் அந்த இரண்டு குழந்தைகளும் அலறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். பின்னர் இந்த தகவல் அப்பகுதியில் பாம்பு பிடிப்பதில் பிரபலமான 23 வயது பிரைஸ் லாக்கெட்டிற்கு கொடுக்கப்பட்டது. உடனே ...

Read More »

தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை! – கீர்த்தி சுரேஷ்

மகாநடி படத்தில் சிறந்த நடிகையாக தேர்வு செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். டெல்லியில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார். கீர்த்திசுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:- “ரொம்ப ...

Read More »

ஊடகவியலாளர்.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல்! -சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய வீட்டுத் திட்டம் அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா?’ என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை ஒன்று கடந்த 04.08.2019 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் பிரசுரமானது. குறித்த கட்டுரையில்  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும் அதில் இடம்பெறும் முறைக்கேடுகள் குறித்தும் பிரசுரமாகியிருந்தது. இந்நிலையில் குறித்த கட்டுரையுடன்  தொடர்புடையோர் தொலை ...

Read More »