குமரன்

சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்!

சிட்னி விமான நிலையத்திற்குள் பயங்கரவாத சகோதரர்கள் அமைதியான முறையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தவிருந்த காணொளி  காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஹ்மூத் (31) மற்றும் கலீத் கயாத் (51) சகோதரர்கள் கடந்த 2017ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பரபரப்பான விமான நிலையத்திற்கு வெளியே தங்களுடைய சாமான்களுடன் சேர்த்து வெடிகுண்டுகளை சுமந்து சென்றுள்ளனர். காவல் துறை  வெளியிட்டுள்ள அந்த காணொளி காட்சியில், சோதனை செய்யும் இடத்தை நெருங்கிய போது, எடை அதிகம் இருப்பதாக மஹ்மூத் கூறியுள்ளார். உடனே இருவரும் மிகப்பெரிய ...

Read More »

‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’

யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. மூன்று நாள்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்த கண்காட்சி, பார்வையாளர்களின் அதிகரித்த வருகையால், கால நீடிப்பும் செய்யப்பட்டது. கண்காட்சி பார்த்த களைப்பில், ‘அம்மாச்சி’யில் ஏதேனும் குடிப்போம் எனச்சென்றோம். அங்கு சென்றால், அங்கும் அரசியல் அலசல்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட வந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் குழாம், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தது. “நீங்கள் யாருக்குச் ...

Read More »

சஜித்தை வேட்பாளராக்க ரணிலின் நிபந்தனை!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில்   நேற்று (24) இரவு இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, கபீர் ஹசிம், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் ...

Read More »

மோடியை குறி வைக்கும் பயங்கரவாதிகள்!

காஷ்மீர் பிரச்சினைக்கு பழி தீர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல பயங்கரவாதிகளின் சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்பு கண்டுபிடித்ததுள்ளது. காஷ்மீர் பிரச்சினையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு 370-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. காஷ்மீரில் வன்முறைகள் தொடரக்கூடாது என்பதற்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களை கைது ...

Read More »

யாழ். சட்டத்தரணிகள் வெள்ளிவரை சேவைப் புறக்கணிப்புக்கு ஆதரவு!

வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏற்று ஆதரவளிப்பது என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கமும் தீர்மானம் எடுத்தது. யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற சட்ட நூலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்து செயற்பட்டமை மற்றும் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரர் அவர் சார்ந்த தரப்புகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ...

Read More »

மீண்டும் வரலாற்று படத்தில் பிரபாஸ்!

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ராமாயணம் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வந்தது. இதில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். மலையாளத்திலும் ராமாயணத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயணம் ...

Read More »

கூட்டமைப்பினர் நேற்றைய குழப்பங்கள் தொடர்பில் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை!

நீராவியடியில் பொங்கலிற்கு திரண்டு வந்த கூட்டமைப்பினர் நேற்றைய குழப்பங்கள் தொடர்பில் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையென அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.இது தனக்கு அதிர்ச்சியை தந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் விபரிக்கையில் கடந்த சனிக்கிழமை 21ம் திகதி பின்மாலை சட்டத்தரணி காண்டீபன் நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சையை என் கவனத்துக்கு கொண்டு வந்தார். ஆலய தரப்பின் சார்பாகவும் நவநீதன் என்னை அழைத்து தமது நிர்க்கதி நிலைமையை என் கவனத்துக்கு கொண்டு வந்தார். புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகார தேரரின் உடல் நீராவியடிக்கு ...

Read More »

காவல் துறை நீதியின் முன்னிறுத்துமாறு கோரி சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற காவல் துறையினரை   நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.   முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற காவல் ...

Read More »

பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி பாப் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி கோவிலில் ஒப்படைப்பு!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டு நீதிமன்ற நடைமுறைகளுக்கு பிறகு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகசமுடையார் உடனுறை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்த விலைமதிப்புமிக்க ஐம்பொன் நடராஜர் சிலை கடந்த 1982ம் ஆண்டு திருட்டு போனது. இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும். இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த ...

Read More »