குமரன்

பிரதமருக்கு அனுமதி மறுத்த ஓட்டல் நிர்வாகம்- நியூசிலாந்தில் சுவாரஸ்ய சம்பவம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவருடன் ஓட்டலுக்கு சென்ற போது அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஓட்டல் நிர்வாகம் கூறியது குறித்து காண்போம்… நியூசிலாந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவர் கிளார்க் உடன் தலைநகர் வெலிங்டனில் உள்ள ...

Read More »

எல்லைப்படையினர் அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களுக்குள்  எல்லைப்படையின் அதிகாரத்தை  அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. தடுப்பு முகாம்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் கைப்பற்றப்படும்  பொருட்களை பறிமுதல் செய்யவும் இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த அதிகாரம் காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை சமாளிக்கும் விதமாக இத்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டட்ஜ் தெரிவித்துள்ளார். “இவ்வாறான வெளிநாட்டினர் குழந்தைகளை பாலியல் துஷ்பிரோயகம் செய்தவர்களாகவும் வன்முறை, போதை மருந்து பயன்பாடு கொண்டவர்களாகவும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கின்றனர்,” என அவர் ...

Read More »

வதந்தியை பார்த்து ரசித்த பிரியா பவானி சங்கர்

 தன்னைப்பற்றி வந்த செய்தியை நடிகை பிரியா பவானி சங்கர் படித்து ரசித்ததாக அவர் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் குறித்து கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவருடன் காதல் என்பது குறித்த பதிவை நடிகை பிரியா பவானி சங்கர் பதிவு செய்தார். அந்த பதிவை வைத்து அவருடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. இதனையடுத்து அவரது தரப்பினர் விளக்கம் ...

Read More »

24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான நோக்கியா 6.3 மாடல் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகியுள்ள புதிய தகவல்களில் பிராசஸர் தவிர நோக்கியா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களும் வெளியாகி ...

Read More »

ஈழ தமிழர்களுக்கு உதவிய ஆரி அருஜுனா

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் ஈழ  அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட    அத்தியாவசிய மளிகை பொருட்கள்  வழங்கினர். இதனை பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜுனா கூறுகையில்…. கொரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தின்  தாரமங்கலத்திலுள்ள   நமது தொப்புள் கொடி உறவுகளான  ஈழ தமிழ்களும் 50 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறார்கள்  ...

Read More »

புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் – விக்கி

தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எனதருமை சகோதர சகோதரிகளே, கொரோனா வைரசின் நிழலில் நாம்  இன்று ஒருவரோடு ...

Read More »

கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் மாதிரி குறிப்பிடத்தக்க பலனை அளித்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்தால் செப்டம்பரில் வெளிவர வாய்ப்பு உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆறு மாதமாக கொரோனா தொற்று 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ...

Read More »

வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி

வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். வாட்ஸ்அப் வெப் சேவையிலும் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. ...

Read More »

இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய சனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது. எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றழிக்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்றைய தினம் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது இன்று காலை பத்து முப்பது மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த இலட்சுமணன் பரமேஸ்வரி அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு ...

Read More »