24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 24 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனான நோக்கியா 6.3 மாடல் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகியுள்ள புதிய தகவல்களில் பிராசஸர் தவிர நோக்கியா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.
நோக்கியா 7.2
அதன்படி புதிய நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுவரை நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இத்துடன் நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்படும் என்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனை ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக சிறிய ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி நோக்கியா 6.3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் இதன் விலை 249 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20,400 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.