குமரன்

ட்விட்டர் ஐஒஎஸ் செயலியில் புது அம்சம் அறிமுகம்

ட்விட்டர் நிறுவனம் தனது ஐஒஎஸ் செயலியில் புதிய அம்சத்தினை வழங்க துவங்கி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். ட்விட்டர் ஐஒஎஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் புதிய அம்சத்தை வெளியிட துவங்கி உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் ட்விட் பதிவிட முடியும். பயனர்கள் ட்விட்டரில் பதிவிட விரும்பும் கருத்துக்களை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் பேசி அவற்றை ஆடியோ வடிவில் பதிவிட முடியும். பின் ட்விட்டரில் அவர்களது ஃபாளோவர்கள் வாய்ஸ் ட்விட்களை கேட்கலாம். வாய்ஸ் ட்விட் உருவாக்க ட்விட் கம்போசர் ஆப்ஷனை க்ளிக் ...

Read More »

சீண்டிப் பார்க்கும் சீனா: சீற மறுக்கிறதா இந்தியா?

“இமயமலையில், இன்னமும் எல்லை வரையறுக்கப்படாத பகுதி ஒன்றில் இந்திய – சீனத் துருப்புகளுக்கு நடுவே நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் கடும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று தொடங்குகிறது ‘சீனா டெய்லி’ எனும் சீன நாளிதழின் தலையங்கம். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) இந்தியத் துருப்புகள் இரு முறை தாண்டி வந்ததால் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்றும், ‘ஆத்திரமூட்டும்’ அவர்களது செயல், இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்தது என்றும் அந்தத் தலையங்கம் குற்றம் ...

Read More »

வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே….

இலங்கையில் மோதல் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆகின்ற போதிலும் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றது என ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமைக்கான சுதந்திரம் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசாங்கத்தின் உத்தரவுகளிற்கு அப்பால் இது சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். 2019 உயிர்த்த ...

Read More »

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விவகாரம் – பந்துல என்ன சொல்கிறார்?

ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இருக்கும் அந்த உரிமையை ஒருபோதும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க மாட்டோம் என ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை விநியோகிக்கும் ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது நிதி பிரச்சனையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ...

Read More »

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் காலமானார்

அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி காலமானார். கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. இவர் சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார். பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்த இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  48 வயதாகும் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் ...

Read More »

உலகை அதிரவைத்திருக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள்!

நிறவெறிக்கு எதிராக உலகெல்லாம் ஊர்வலங்கள் தற்போது நடப்பதற்கு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இது போன்ற பல படுகொலைகள் இதுவரை பல நாடுகளில் நடந்தேறி இருக்கின்றன. கனடாவிலும் ஊர்வலங்கள் நடந்தேறின. தனிப்பட்ட சாதாரண ஒருவரின் மரணம், அதை வீடியோ படமாக்கியது, அதை ஊடகங்கள் வெளியே கொண்டுவந்த முறை, பொறுமையை இழந்த கறுப்பின மக்கள் ஒன்றுபட்டுச் செயலாற்றியது என்று எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை இந்த மரணம் அதிரவைத்திருக்கின்றது. இது போன்ற வேறு நாடுகளில் நடந்த பல மரணங்களை மூடி மறைக்கவும் ...

Read More »

ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை என்கிறார் தேரர்!

ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த ...

Read More »

சிறிலங்கா படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை?

ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுவதை கடைப்பிடிக்குமுகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்களை அடங்கிய வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும்,ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் வெளியிட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளின் முழுமையான அளவினை இந்த வரைபடம் வெளிப்படுத்தவில்லை என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. ஜேவிபியின் முதலாவது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அரசு , தனியார் துறையின் மீது சைபர் தாக்குதல்!

அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்  மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களைத் திருடி இருக்கலாம் ...

Read More »