குமரன்

விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன்

தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடா நிதியை துஸ்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு கனடாவிலிருந்து நிதி ஏதும் தரப்படவில்லையென மறுதலித்துள்ளதுடன் கட்சியிலிருந்து விமலேஸ்வரியை நீக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். அரச தரப்பிலிருந்து கூட்டமைப்பிற்குள் ஊடுருவல் நடந்துள்ளதாகவும் பெருமளவு பணம் அள்ளி வீசப்படுவதாகவும் அப்பின்னணியிலேயே விமலேஸ்வரி தன் மீது சேறுபூசுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவருடன் இணைந்து செயற்பட்டவரே விமலேஸ்வரி என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவரை தூண்டிவிட்டேன ...

Read More »

கொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை

கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் தப்பிக்க நடிகை தேவயானி யோசனை சொல்லி இருக்கிறார். கொரோனாவில் இருந்து வயதானவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை தேவயானி வற்புறுத்தி உள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா கஷ்ட காலத்தில் அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். விதவிதமாக சமைத்து போடுகிறேன். தோட்ட வேலைகள் செய்கிறேன். வெளியே எங்கேயும் போவது இல்லை.   கட்டில் படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ் பாபு இயக்கிய அரசின் கொரொனா விழிப்புணர்வு படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் ...

Read More »

தமிழ் வேட்பாளர்களை நோக்கி கேள்விகள்…..

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன ?அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன? என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் அந்த அடிப்படையிலேயே இக் கேள்விகள்கேட்கப்படுகின்றன. கேள்வி ஒன்று -மிகவும் அடிப்படையான ...

Read More »

இரண்டு படகுகள் மோதி விபத்து: 30 பேர் பலி

வங்கதேசத்தில் புரிகங்கா ஆற்றில் படகுடன் மோதி மற்றொரு படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் டாக்கா நகரில் உள்ள புரிகங்கா ஆற்றில், ஆட்களை ஏற்றிகொண்டு மார்னிங் பேர்டு என்ற படகு முன்ஷிகஞ்ச் என்ற பகுதியில் இருந்து டாக்கா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோயூர்-2 என்ற மற்றொரு படகுடன் மோதி கவிழ்ந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்களை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் ...

Read More »

இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில்…..

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான சர்வதேச யுத்த குற்ற விசாரணையை, அரசியல் தீர்வு வரப்போகின்றது என்ற கானல் நீரைக் காட்டி மழுங்கடித்தவர்கள் நாம் அல்லர் எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன்,  வட மாகாண சபையில் நாம் இயற்றிய இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம் எனவும் அறிவித்திருக்கின்றார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கருத்துப் பரப்புக் கூட்டம் மல்லாகம், குழமங்காலில் நேற்றிரவு நடைபெற்ற போது, அதில் நிகழ்த்திய பிரதான உரையிலேயே விக்கினேஸ்வரன் இதனைத் ...

Read More »

எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை

கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ஆழமாக யோசிக்க வைத்தது.   குறிப்பாக, மூன்று பதில்கள் இவ்வாறு யோசிக்க வைத்தன. “மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா” என்ற வினாவுக்கு அளிக்கப்பட்ட பதில் யாதெனில், “நல்லாட்சி அரசாங்கத்தை, நாங்கள் தான் ஆட்சியில் இருத்தினோம். தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர அவர்களும் முயன்றார்கள்; அவர்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் ஏமாந்து ...

Read More »

வதந்திகளை நம்ப வேண்டாம்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். வயது மூப்பின் காரணமாக 2018ம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை ஜானகி நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் பாடகி எஸ்.ஜானகி ...

Read More »

வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய முகநூல் நடவடிக்கை – மார்க் ஜூகர்பெர்க் உறுதி

முகநூலில் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள் களையப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளமான முகநூலில் இனவெறி, வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் இதை சுட்டிக்காட்டி கோககோலா நிறுவனம் முகநூல் விளம்பரங்களை வரும் 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதேபோல வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முகநூலில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. இதனால் முகநூல் நிறுவனம் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்த ...

Read More »

ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைது!

கடந்த ஜனவரி மாதம், 6 சீனர்களை இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆட்கடத்தல் குற்றம் புரிந்ததாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் கைதாகியுள்ளனர். முன்னதாக, கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த 6 சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் என இந்தோனேசிய படகை விலைப்பேசி சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய எல்லைப்பகுதியை அடைய முயன்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட சீனர்கள், ஆஸ்திரேலியாவின் மனிதர்களற்ற ...

Read More »

உலகமுஸ்லீம் லீக் அமைப்பிடமிருந்து மைத்திரி எத்தனை மில்லியன் பெற்றார்?

உலகமுஸ்லீம் லீக் அமைப்பிடமிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். உலக முஸ்லீம் லீக்கின் செயலாளர் நாயகம் கலந்துகொண்ட நிகழ்வில் கடந்த வருடம் தான் கலந்துகொண்டதாக சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிவழங்குவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை முஸ்லீம் அமைப்பு வழங்கும் என அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த நிதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி உலக முஸ்லீம் லீக் இதனை தெளிவுபடுத்தியுள்ளது ...

Read More »