குமரன்

மாவை – சுமந்திரன் இடையே இணங்க்கம் ஏற்படுத்த முயற்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் குழு ஒன்று இறங்கியிருக்கின்றது. இதன் பலனாக இருவரும் நேற்றிரவு யாழ். நகரில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நகரிலுள்ள மருத்துவர் ஒருவருடைய விடுதியில் இருவரும் சந்தித்து நேற்றிரவு 10 மணிக்கு மேலாகப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் உருவாகியிருந்த முரண்பாடுகள் தொடர்பில் இருவரும் விரிவாக முறையில் ...

Read More »

யாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் மீட்பு ! இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியவேளை மனித எச்சங்கள் வெளிவந்துள்ளன. 2006 ம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பிட்ட பகுதியில் படையினர் நிலைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.  இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது.  இதில் நிதின் கதாநாயகனாக ...

Read More »

ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் அரசாங்கம் ஈடுபடாது என்கிறார் ஊடக அமைச்சர்

அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் ஈடுபடாது கட்டுப்பாடுகளை விதிக்காது என வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவரும் அல்லது எந்த அமைப்பும் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது குறித்து கருத்து தெரிpவிபபதற்கு கூட நான் தயாராகயில்லை என ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார் ஊடகங்கள் போட்டிதன்மை வாய்ந்த ஆனால் ஆனால் ஆரோக்கியமான, ஒழுக்காற்று விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட ஊடக கலாச்சாரத்தை பின்பற்றும் ...

Read More »

வன்னியில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ள காவல்துறையினர் மீறி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர். துக்குடியிருப்பு காவல்துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். செஞ்சோலை படுகொலையின் 14 வருட நினைவுநாள் நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2006 ஆவணிமாதம் 14ம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் வருடாவரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே ஏற்பாட்டாளர்களுக்கு ...

Read More »

கஜன்கள் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15) மு.ப 9 மணிக்கு இடம்பெறும் என முன்னணி அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

Read More »

திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லையாம்!

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோத்தா முகாம் என அழைத்தனர் என சுமித் ரணசிங்க அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ...

Read More »

ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில் டப்பிங் உரிமைக்கு ரூ.30 கோடியும் பெறுகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை ...

Read More »

தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு சரியானவர் தெரிவாகும் வரை தலைவர் பதவியில் இருந்து தற்போதைக்கு ரணில் விலகுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளதாக சிங்கள இணையத் தளம் ஒன்று தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த இணையத் தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்து இருக்கக்கூடிய தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக ரணிலை நாடாளுமன்றம் செல்லுமாறு பலரும் கோரி உள்ளதாகவும், அதனை அவர் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனவரி வரை அவர் ...

Read More »

என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா?

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்து வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: “65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை ...

Read More »