குமரன்

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் வேறு நாடுகளுக்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

நவுருத்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 10 அகதிகள் அமெரிக்கா மற்றும் நார்வேவில் மீள்குடியமர்த்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9 அகதிகள் அமெரிக்காவிலும் 1 அகதி நார்வேயிலும் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். அதே சமயம், நவுருதீவில் மேலும் 160 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 ஆண்டுகள் அத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பப்பு நியூ கினியா தீவிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடங்களிலும் பல அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றனர். அமெரிக்கா- ஆஸ்திரேலியா ...

Read More »

சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி – ஏன் தெரியுமா?

சூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் ஓடிடி மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டு லாபத்திலிருந்து சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்த ...

Read More »

வெப் தொடரில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்… சம்பளம் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்

புதிய வெப் தொடரில் நடிக்க இருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் கேட்டு பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்தில் சம்பளம், லாபத்தில் பங்கு தொகை என்ற ரீதியில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தற்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி ஆகியோர் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் செத்து ஒதுங்கிய 25 திமிங்கலம்- 270 போராட்டம்

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 25 பைலட் திமிங்கலங்கள் செத்து ஒதுங்கிய நிலையில், 270 உயிருக்கு போராடி கொண்டு இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு கடற்கரையான டாஸ்மானியாவில் 300-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. தகவல் அறிந்த அரசு ஆராய்ச்சியாளர்கள். இந்த திமிங்கலங்களை கடலுக்குள் விட முயற்சி செய்து வருகின்றனர். அதில் 25 திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன. 270 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், டாஸ்மானியா ...

Read More »

கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்

கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக உலகமே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் பேரின் உயிரைப்பறித்திருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வேலைக்கு இதுவரை பொதுவாக எக்ஸ்ரேதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஏ.ஐ. என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அதிக செயல்திறனை ...

Read More »

இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும்

19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தத்தில் அநேக சாதகமான அம்சங்கள் இருந்ததால் அதை முற்றாக நிராகரிக்க முடியாது என அவர் தெரிவித்தார். “தகவல் உரிமைக்கு உத்தரவாதமளிக்கும் விதிகள், ஜனாதிபதிக்கான 5 ஆண்டு வரையறை, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடிய எண்ணிக்கையை இரண்டாக வரையறுத்தல், இரட்டைக் குடியுரிமை கொண்டோரை தேர்தலில் போட்டியிடாது தடுத்தல் போன்ற 19ஆம் திருத்தத்தில் காணப்பட்ட நல்ல பல ...

Read More »

கிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை

கிளிநொச்சியில் இன்று இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் க.பொ. உயர்தரப்பரீட்சையில் வணிகத்துறையில் 3 ஏ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக்கான காரணங்கள்வெளியாகாத அதேவேளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More »

விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் நடிக்கும் படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை டாப்சியும், நடிகர் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு ‘அனபெல் சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனபெல் என்பது ...

Read More »

விழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும்

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் உள்நாட்டுரீதியாகவும் , அண்டை நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய அரசியல் ரீதியாகவும் பாரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கம் கடைப்பிடிக்க உள்ள உள்நாட்டு — வெளிநாட்டு கொள்கைகள், மற்றும் அவர்கள் மேற்கொள்ளவுள்ள நிலைப்பாடுகள் என்பன இலங்கை தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இப்பின்னணியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக இறுக்கமான நிலைப்பாடுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் துல்லியமாக உள்ளன. இலங்கை — ...

Read More »

10 கிராமங்களை காப்பாற்றிய கார்த்தி…..

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, 10 கிராமங்களை காப்பாற்றி இருப்பதால் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறது. அதுபோல் அவரது சகோதரர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள ...

Read More »