சூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஓடிடி மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டு லாபத்திலிருந்து சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்த ரூ.30 லட்சம் தொகையை தற்போது தயாரிப்பாளர்கள் கே ஆர் , கே. முரளிதரன் , கே.ஜெ.ஆர். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள். சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal