குமரன்

அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை மோசடி செய்த பெண்!

இலங்கையில் உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள் என்று கூறி அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை வசூலித்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல நிதி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதால் அவரின் பெயரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிடவில்லை. 550 மில்லியன் டொலர்களை செல்வமாக கொண்டுள்ள இலங்கையின் முன்னணி வர்த்தகரே தமது தந்தை என்று கூறியுள்ள இந்த பெண் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்களையும் தமது மோசடி பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளார். இதன்போது அவர் பண வைப்புகளுக்காகவும் பணத்தை வரவழைத்துக்கொள்ளவும் தமது “கிரான்ட் சுப்பர் ரிச்” ...

Read More »

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- இலங்கை அமைப்பு

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுவருவதாக இலங்கையை சேர்ந்த நுகர்வேர் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சட்டநடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் கொரோனா பரவியமைக்கான பொறுப்பை சீனா ஏற்கவேண்டும் என அவர் டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார். சீனாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்த சட்ட விடயங்களை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டரீதியான காரணங்கள் ...

Read More »

சீனாவுக்கு வந்தவர்களில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு வந்தவர்களில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த எல்லை மூடப்பட்டது. ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே விளாடிவோஸ்டோக் அருகே உள்ள எல்லை வழியாக சீனாவுக்கு சமீபத்தில் ஏராளமானோர் சென்றனர். அவர்களில் 59 சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த எல்லையை ரஷியாவும், சீனாவும் மூடி உள்ளன. இனிமேல், ரஷிய விமானங்களில் விளாடிவோஸ்டோக் பகுதிக்கு வந்திறங்கும் சீனர்கள், 14 நாட்கள் தனிமை முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்றும், சிறப்பு ...

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி நபர் உடல்நிலை தேறி வருகின்றார்! – வைத்தியர் த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவரது உடல்நிலையில் தொடர்பில் நேற்று இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார் ; என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ...

Read More »

விலகி நின்று ஒன்றிணைவோம்!

தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால் கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் ...

Read More »

புதிய பட்டுப்பாதை – கொரோனா – சீனா வேகமாக நகர்கிறது……!

முழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள ;கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அதவாது அமெரிக்க இராணுவமே கொரோனா வைரஸை சீனாவில் பரப்பியதாக சீன அரச தலைவர்கள் கடுமையாகவும் வெளிப்படையாகவும் குற்றம் சுமத்தினர். மறுப்புறம் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என அழைத்தது மாத்திரமின்றி திட்டமிட்டு முழு உலகிற்கும் சீனா வைரஸை பரப்பியதாக குற்றம் சுமத்தினார். இந்த இரு தரப்பு சொற் சமரின் ஊடாக இதுவரைக்காலமும் பணிப்போராக இருந்த ...

Read More »

மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை….!-வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனிய

பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று என்பவற்றுக்கு கொத்தமல்லி, வெனிவேல் என்வற்றை பயன்படுத்துவதன் பலாபலன் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். அத்தோடு மூலிகை இலைகளைப் பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறைமையை பின்பற்றுவது சிறந்த நோய்த் தடுப்பு முறைமை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், கொத்தமல்லி மற்றும் வெனிவேல் தொடர்பில் அறிவியல் – தொழிநுட்ப அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் நோய்த்தடுப்பு சக்தி தொடர்பில் மூன்று பிரிவுகள் இணங்காணப்பட்டுள்ளன. அந்த ...

Read More »

ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள காவல் துறை நிலையங்களில் ; மக்கள் ஒன்று கூடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை முறைகளை அரசாங்கம் நடை முறைப்படுத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதில் காவல் துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், ...

Read More »

ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே

சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை இதன்மூலம் தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஆலன் பார்டரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய ...

Read More »

இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சுவதற்கு காரணம்!

ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும். இந்திய வீரர்களை சீண்டியே அவுட்டாக்கும் யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றப்பிறகு, விராட் கோலி ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ...

Read More »