சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுவருவதாக இலங்கையை சேர்ந்த நுகர்வேர் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவிற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சட்டநடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் கொரோனா பரவியமைக்கான பொறுப்பை சீனா ஏற்கவேண்டும் என அவர் டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்த சட்ட விடயங்களை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டரீதியான காரணங்கள் உள்ளதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் அது குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகநாடுகளிற்கு வைரஸ் பரவ அனுமதித்தது சீனா என அவர் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்படக்காரணம், சீனாவின் அலட்சியமே என நுகர்வோர் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
சீனா தனது நாட்டில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்த போதிலும் ஏனைய நாடுகளில் பரவுவதற்கான நடவடிக்;கைகளை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
நடந்த விடயங்களிற்காக நட்ட ஈடாக , இலங்கை செலுத்த வேண்டிய கடன்களை அறவிடுவதில்லை என சீனா தீர்மானிக்காவிட்டால், சிறிலங்கா அரசாஙகம் அதனை உறுதி செய்யாவிட்டால,; சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து நீதியை கோருவோம் என ;நுகர்வோர் உரிமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.