வங்காளதேச நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர். மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் ...
Read More »குமரன்
நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் அவர்….
நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
Read More »சிறிலங்கா இராணுவத்தால் சூடப்பட்டவரை பார்வையிட்டார் கஜன்!
யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார் இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 22) என்ற இளைஞள், கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்தார். இதனையடுத்து, குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் தெரிவிக்கையில், “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ...
Read More »யாழில் சிறிலங்கா இராணுவம் துப்பாக்கிச் சூடு !
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை (15.05.2020) ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி ...
Read More »என் பொண்டாட்டிக்காக செய்வேன் – சிம்பு
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, என் பொண்டாட்டிக்காக செய்வேன் என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் இவர் சிம்புவின் நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர். இந்நிலையில் ஊரடங்குக்கு முன்னர் இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார். அப்போது, வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க ...
Read More »கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார்!-இந்திய உயர்ஸ்தானிகர்
சிறிலங்கா – இந்த நாடுகளின் நட்புறவுவில் தமிழர்கள் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாக சிறிலங்காவுக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்க தாம் தயார் என உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயும் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே தனது சான்றுகளை ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்து சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றிருந்தார். ...
Read More »‘மவுத் வாஷ்’ கொரோனா பரவலை குறைக்குமா? ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு
மவுத் வாஷ்’ எனப்படும் வாயை சுத்தப்படுத்த பயன்படும் திரவம் மனித உடலில் கொரோனா பரவலை குறைக்குமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவிய இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மவுத் வாஷ் ...
Read More »கொவிட்-19க்குப் பின்னரான உலகம்
“வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது. புதிய வழமை எது, அது ஏற்படுத்தியுள்ள சட்டகங்கள், ஒழுங்குகள் எவை? அவை எம்மை எவ்வாறு பாதிக்கும், எம்மில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும்? இவை, கொவிட்-19 ...
Read More »இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி
இளம் ஊடகவியாளர் ஒருவர், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லற்றில், நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 21 வயது ரகுநாதன் மிதுன்சங்கர் எனும் இந்த ஊடகவியலாளர், வந்தாறுமூலையிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, தனது சக ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவருடன் 2 மோட்டார் சைக்கிளில் நால்வரும் கல்லாற்றிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதன்போது, ...
Read More »எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை ரீதியில் ஊரடங்கு
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் காணப்படும். இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு ...
Read More »