சிறிலங்கா – இந்த நாடுகளின் நட்புறவுவில் தமிழர்கள் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாக சிறிலங்காவுக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்க தாம் தயார் என உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே தனது சான்றுகளை ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்து சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில் புதிய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் ஆர்.சம்பந்தன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா இந்திய நாடுகளுக்கு இடையிலான தொடர்பு நீண்டகாலமாக இருந்து வருகின்ற அதே நிலையில் தமிழர் தரப்பினர் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் எனவே இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்ப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் எனவும் ஆர்.சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.
அதேபோல் உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal