வடமராட்சி கடற்தொழில் சமாசத்துக்கு உள்பட்ட மீனவர்கள் எவரும் கடற்தொழிலுக்கு செல்லமாட்டார்கள். வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடலட்டை தொழில் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவற்றைத் தடுக்க கோரி கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாமையைக் கண்டித்தும் வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட்ட மீனவர்கள் இந்த தொழில் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு வடமாகாண கடற்தொழிலாளர்கள் அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்று வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More »குமரன்
மந்த்ரா ஹோட்டலில் உள்ள ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று…..
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ள மந்த்ரா ஹோட்டலில் உள்ள ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 8ம் தேதி ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை 4யிலிருந்து அந்த நபர் இந்த ஹோட்டலில் வேலை செய்யவில்லை எனவும் ஆஸ்திரேலிய உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு வருகின்றது. “அனைவரும் பீதியில் இருக்கின்றனர்….யாருக்கேனும் இங்கு தொற்று ஏற்பட்டால் எங்கள் அனைவருக்கும் ...
Read More »தனது விரிவுரையாளருக்காகப் போராடுமா யாழ் பல்கலைக்கழகம்?
சில ஆண்டுகளுக்கு முன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அருட்தந்தை ஜெயசீலன் “இப்பொழுது தமிழ் மக்களுக்கு அறிவியல் சன்னியாசமே தேவைப்படுகிறது” என்று கூறியிருந்தார்.அதாவது ஒரு புலமையாளர் தனது ஆன்மாவை இழந்து பதவிகளையும் பொறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வதை விடவும் தனது பதவிகளையும் சுகங்களையும் துறந்து தனது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்படவே அவர் அவ்வாறு கூறியிருந்தார் . யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளரான குருபரனுக்கும் அறிவியல் செயற்பாட்டுச் சுதந்திரமா? அல்லது உத்தியோகமா? என்ற முடிவை ...
Read More »சமந்தாவை முந்திய பூஜா ஹெக்டே
முன்னணி நடிகையான சமந்தாவை நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் முந்தி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்தது. சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திடீரென தனது சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தனது சமூக வலைத்தள கணக்கை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பூஜா விளக்கம் அளித்தார். ஆனால் இந்த விளக்கத்தை ...
Read More »பிரியா நடேசன் பேர்த் மருத்வமனையில் அனுமதி
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் குடும்பமான பிரியா நடேசன் குடும்பத்தில் பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியதையடுத்து பிரியா தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள எஸ்.பி.எஸ். தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சுமார் 3 வாரகாலமாக கடுமையான சுகவீனமடைந்த நிலையில் அவர் இருந்த நிலையிலேயே இன்றைய தினம் மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்மஸ் தீவில் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும், கடுமையான போராட்டங்களின் பின்னரே அவரை சிகிச்சைக்காக ...
Read More »கலாநிதி குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுவது என்ன?
பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீன தன்மை இராணுவ நலன்களுக்கு மேலானது அல்ல என்ற நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றமையை யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் கவலையும் விமர்சனமும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முறிகண்டியில் உள்ள சாந்தபுரத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், இதேபோன்ற ஒரு நிலைமை தான் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த ...
Read More »குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்…..!
தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் கோட்டாபயவின் அரசு தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமராட்சி-கலிகையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் மிருசுவில் படுகொலையாளி இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றமே செய்யாத பல தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் வாடுகின்றனர். நல்லாட்சி அரசில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர், இன்று ...
Read More »ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?
“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும் மேலான அரசாட்சிக் கலையைப் பொருத்தவரையில், அதற்குச் சற்றும் தகுதியோ திறமையோ அற்ற மோசடிக் கூட்டமொன்றையே நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். “ -பிளேட்டோ வடக்கில் வசிக்கும் ஒரு தமிழ் மனநல மருத்துவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார் எங்களுடைய அரசியல் தமிழ்நாட்டு அரசியலை போல மாறிவிட்டதா ? என்று அவர் ...
Read More »முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய் தேவரகொண்டா
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளியிருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களைத்தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் தளத்தை அதிகமான புகைப்படங்களைப் பகிரும் தளமாகவே பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். சில தனிப்பட்ட புகைப்படங்களையும் அத்தளத்தில்தான் முன்னணி நடிகைகள் அதிகம் பகிர்வார்கள். தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள, ...
Read More »அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகம் விற்பனையில் சாதனை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) விமர்சித்து அவரது அண்ணனின் மகளான மேரி ட்ரம்ப் எழுதியுள்ள புத்தகம் ‘Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man‘ ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்த குறித்த புத்தகமானது அன்றைய தினமே முற்பதிவு விற்பனை, இ-புத்தகம் மற்றும் ஓடியோ என 9,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப் புத்தகத்தில் ட்ரம்ப்பை மோசமானவராக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More »