குமரன்

புதிய தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். காஜல் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ படத்திலும் தமிழில் ’இந்தியன் 2’ மற்றும் பேய் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இவர் சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிய காஜல், தற்போது மீண்டும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ...

Read More »

ஐந்துசந்தியில் போராட்டம் – கஜேந்திரகுமார் பங்கேற்பு!

முஸ்லிம்களின் உடல் தகனத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் – ஐந்துசந்தி பகுதியில் இன்று (25) யாழ் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read More »

வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை ...

Read More »

லொட்டரியில் 147 கோடி பரிசாக வென்ற மாணவன்

டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது. இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வியாழனன்று இரவு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இவ்வளவு பெரிய தொகை என்பதை அறிந்ததும், நம்ப முடியவில்லை எனவும், உடனையே பெற்றோருக்கு தகவல் தர அழைத்த போது அவர்கள் தூக்கத்தில் இருந்ததால் விடிந்ததும் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். ...

Read More »

எத்தியோப்பியாவில் 100 பேர் படுகொலை

எத்தியோப்பியாவில் இனவாத மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல் அங்கு இன மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் நடந்த இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று எத்தியோப்பிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. பெனி‌ஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தின் மெட்டகல் மண்டலத்தில் உள்ள கிராமங்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பிரதமர் அபி அகமது ...

Read More »

சேது முதல் சித்ரா வரை

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர். அவற்றின் தொகுப்பை காணலாம். 2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான ஒரு வருடம் தான். இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதன் தொகுப்பை காணலாம். விசு எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு. சினிமாவில் குடும்ப சென்டிமென்டை வைத்து ஏராளமான படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கும் இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ...

Read More »

தமிழ்க் கட்சிகளின் உபாயங்களும் யதார்த்த நிலையும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன. 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை மனித உரிமைகள் அமைப்பின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டம் ஈழத் தமிழரைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானது. அடுத்ததாக என்ன நடைபெறப்போகின்றது என்பது இந்தக் கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும். இலங்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், “நல்லாட்சி” பதவிக்கு வந்த ...

Read More »

யாழ்.முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை ஆதரிக்கத் தயார்

யாழ். மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தவிர்ந்த வேறு ஒருவரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தமது கட்சி தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால், அவரையும் ஆதரிக்கத் தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார். “யாழ் மாநகரசபை முதல்வருக்கு ஆர்னோல்ட்டைத் ...

Read More »

மருதனார்மடம் பொதுச்சந்தையில் பரவிய வைரஸ் மிகவும் வீரியம் கூடியது

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் நாள்களில் கிறிஸ்மஸ் மற் றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இந்தச் சூழ்நிலை யில் நாட்டில் கொரோனாத் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின் றது. அதிலும் தற்போது யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் ...

Read More »

எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா

  “மனுஸ்தீவில் இருந்ததை விட இங்கு(ஆஸ்திரேலியாவில்) மோசமாக இருக்கிறது. ஒரு மணிநேர ஜிம்- அது மட்டுமே நான் அறையை விட்டு வெளியில் அனுமதிக்கப்படும் நேரம். அவர்கள்(ஆஸ்திரேலிய அரசு) எங்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோமாலிய அகதியான இஸ்மாயில் ஹூசைன். “கடந்த சில வாரங்களாக யாரும் அறைகளை விட்டு வெளியில் வரவில்லை. அவர்கள் போராட்ட மனநிலையில்  வெளியில் வராமல் இல்லை, நம்பிக்கையின்மையால்- மனச் சோர்வினால் வெளியில் வராமல்  இருக்கிறார்கள்,” என்கிறார் ஹூசைன். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 200 அகதிகள் தொடர்ந்து அங்கும் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து இக்கருத்தை  சோமாலிய அகதி தெரிவித்திருக்கிறார்.

Read More »