தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இதை செய்தால் உலகில் மற்றம் வரும் என கூறியுள்ளார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலாபால், சமீபத்தில் இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை பவ்னிந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். இந்த திருமணம் குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, “‘உங்களுடைய பஞ்சாப் கணவர், உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார். பஞ்சாபியரை நம்பலாம்” என்று வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த ...
Read More »குமரன்
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த்
இலங்கையின் கொரோனாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றபோதும் அடுத்துவரும் காலத்தின் எவ்வாறான நிலைமகள் இருக்கப்போகின்றது என்பதை கணிக்கமுடியாது. எனினும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வருவது உறுதியாக இருக்கின்றபோதும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை வரையறுக்க முடியாது என்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தான நிலைமைகள் எவ்வாறுள்ளன? ...
Read More »“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..!”
“பிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..”: கணவரின் வார்த்தையை கேட்ட அடுத்த நொடியே பிரிந்த தாதியின் உயிர் உலகின் பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாக வலம் வந்து கொண்டிருக்கிறது கொரோனா. பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளின் தாயான தாதியொருவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்து தன்னுயிரை நீத்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 16 ஆண்டுகள் தாதியாக பணி புரிந்த அரீமா என்ற பெண்ணொருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்காக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், ...
Read More »இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390க்கு அழையுங்கள்!
இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390 என்ற இலக்கத்துக்கு, அழைக்குமாறும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய பின்னர், நோய்அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், தேவையேற்படின் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு 1990 அம்பியூலன்ஸ் வசதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அறிவிப்பு
19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
Read More »கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷாருக்கான் உதவி
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய உள்ளதாக நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். தானும், தனது மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு ...
Read More »சிறிலங்காவில் 2691 கைதிகள் விடுப்பு!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ...
Read More »கொரோனா அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் தாக்கம் செலுத்தக்கூடுமா?
உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா உருவாக்கியுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் தாக்கம் செலுத்தக்கூடும் எனப்படுகின்றது. கொரோனா அச்சம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரின் குடியேற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சில ஆஸ்திரேலியர்கள் வரவேற்கக்கூடும் என்றும் ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ...
Read More »பத்திரிகையாளர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
பிரபல சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதியின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். சினிமா பத்திரிக்கையாளர்களில் பிரபலமானவர் நெல்லை பாரதி. இவர் எழுத்தாளரும், பாடலாசிரியாகவும் இருந்திருக்கிறார். இவர் இன்று காலை அவரது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு பத்திரிகையாளர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் பலரும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நெல்லை பாரதியின் இல்லத்திற்கு நேரில் சென்று ...
Read More »
Eelamurasu Australia Online News Portal